செனகல்
உலக நாடுகள்
சந்தோஷ்
அமைவிடமும் எல்லையும்
கேப்வெர்டி கடற்கரை
* இந்நாட்டின் தலைநகர் டக்கார்
* செனகல் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு. (செனகால் என்றும் உச்சரிக்கலாம்.)
* செனகலின் வடக்கில் மௌரிடானியா, கிழக்கில் மாலி, தென்கிழக்கில் கினியா, தென்மேற்கில் பிசாவும் ஆகிய எல்லைகளைக் கொண்டுள்ளது.
*கடல் எல்லையாக கேப்வெர்டே பகுதியைக் கொண்டுள்ளது.
* நாட்டின் பரப்பளவு 197,000 சதுர கிலோ மீட்டராகும்.
டக்கார் நகரின் தோற்றம்
புவியியல்
* செனகலின் நிலப்பரப்பு முக்கியமாக சஹெலின் உருண்டையான மணல் சமவெளிகளைக் கொண்டிருக்கிறது.
*’ கேப்வெர்ட்டின்’ தீவுகள் செனகல் கடற்கரைக்கு 500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன.
* வெப்பநிலை அதிகபட்சமாக சராசரி 300C மற்றும் குறைந்தபட்சமாக 24.20C இருக்-கும்.
* தண்ணீர் தேவைக்கான ஆறுகளாக காம்பியா மற்றும் காசமான்ஸ் முக்கியமானவை.
செனகல் நாட்டு மாணவர்கள்
மொழியும் மக்களும்
குடிஅரசு தலைவர் மாக்கி சால்
* செனகலின் அதிகாரப்பூர்வ மொழியாக பிரெஞ்சு பயன்படுத்தப்படுகிறது.
* குடியரசுத் தலைவர் பெரும் அதிகாரம் பெற்றவராவார்.
* தற்போதைய குடியரசுத் தலைவர் மாக்கி சால். பிரதமர் முகம்மது டியான்னே.
* குடியரசுத் தலைவரால் உள்ளூர் நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.
* 150 உறுப்பினர்களைக் கொண்ட ஒற்றை நாடாளுமன்ற அமைப்பைக் கொண்டுள்ளது.
*செனகலில் சுதந்திரமான நீதித்துறை செயல்படுகிறது.
* நீதிமன்றங்கள், நீதிபதிகள் மற்றும் அரசியலமைப்பு ஆகியவை குடியரசுத் தலைவரால் கண்காணிக்கப்படுகின்றன.
வரலாறு
* வரலாற்றில் பல்வேறு இனக் குழுக்களால் செனகல் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொல்பொருள் கண்டுபிடிப்புகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘* செனகல்’ என்ற பெயர் வோல்ஃப் சூனுகால் என்பதிலிருந்து வந்தது. இதற்கு எங்கள் படகு என்பது பொருளாகும்.
* 7ஆம் நூற்றாண்டில் சில அரசுகள் உருவாயின.
* 9ஆம் நூற்றாண்டில் டக்ரூர், 13, 14ஆம் நூற்றாண்டுகளில் நந்தாண்டி மற்றும் வோல்ப் பேரரசுகளின் கீழ் ஆட்சி செய்யப்பட்டது.
* 1300 முதல் 1900 வரை காலத்தில் ஜோலப் பேரரசு மூன்றில் ஒரு பகுதி மக்களை அடிமைப்படுத்தியிருந்தது.
* 15ஆம் நூற்றாண்டின் மத்தியில் போர்த்துகீசியர் செனகல் கடலோரப் பகுதியில் இறங்கினர். பிரிட்டன் இப் பகுதியில் வர்த்தகம் செய்யப் போட்டியிட்டது.
* 1677ஆம் ஆண்டில் அடிமை வர்த்தகத்தை மையமாகக் கொண்டு பிரான்ஸ் தன் கட்டுப்பாட்டை நிலைநாட்டியது.
* 19ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பிய மிஷனரிகள் கிறிஸ்துவ மதத்தை அறிமுகப்படுத்தினர்.
* 1960ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி பிரான்சோடு கையெழுத்திடப்-பட்ட அதிகாரப் பரிமாற்ற உடன்-படிக்கையின் மூலம் முழு சுதந்திர நாடாக மாறியது.
விளையாட்டு
* கால்பந்து மற்றும் மல்யுத்தம் செனகலின் மிகவும் பிரபலமான விளையாட்டுகளாகும்.
* 2018 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் கால் இறுதிக்கு முன்னேறிய மூன்று ஆப்பிரிக்க அணிகளில் ஒன்றாக இருந்தது.
* கூடைப்பந்து விளையாட்டில் மற்ற ஆப்பிரிக்க நாடுகளைவிட மேம்பட்டு செயல்படுகிறது செனகல் அணி.
* மகளிர் கூடைப்பந்து விளையாட்டில் ஆப்பிரிக்க சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளது.
உணவு
மீன்பிடித்தலம்
* செனகல் அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லைக்கு உட்பட்டதால் மீன் உணவு மிகவும் முக்கியமானதாகும்.
* கோழி, ஆட்டுக்குட்டி, பட்டாணி, முட்டை மற்றும் மாட்டிறைச்சி ஆகியவை மக்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன.
* காய்கறிகளும், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களும் உணவில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
* காபி அல்லது தேநீர் சாப்பிடும் பழக்கமும் மக்களிடையே உள்ளது.
பொருளாதாரம்
* நாட்டின் நாணயம் சிஎஃப்ஏ ஃபிராங்க் என அழைக்கப்படுகிறது.
* முக்கிய தொழில்கள்: உணவு பதனிடுதல், சுரங்கம், சிமெண்ட், செயற்கை உரங்கள், துணி, இறக்குமதி செய்யப்பட்ட பெட்ரோலிய சுத்திரிகரிப்பு.
* ஏற்றுமதியில் துணிகள், மீன், வேதிப்பொருட்கள், பருத்தி, கால்சியம் பாஸ்பேட் ஆகியன முக்கிய பங்கு வகிக்கின்றன.
* வெளிநாட்டுச் சந்தையில் இந்தியா, அமெரிக்கா, இத்தாலி மற்றும் அய்க்கிய ராஜ்யம் (United Kingdom) ஆகியவற்றோடு அதிகம் ஈடுபடுகிறது.
* செனகல் பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் நாடாகப் பார்க்கப்படுகிறது.
* உலக அளவில் வேர்க்கடலை உற்பத்தியில் முன்னணி நாடாக உள்ளது.
சுவையான தகவல்கள்
* மேற்கு ஆப்பிரிக்க வரலாற்றை பழங்குடி மக்கள் இசைகளால் காத்து வருகின்றனர்.
* கல்வி கட்டாயமானதாகவும், 16 வயது வரையில் இலவசமாகவும் அரசால் வழங்கப்படுகிறது.
* ஆண்களைவிட பெண்களிடையே கல்வியறிவு அதிகமாக உள்ளது.
* அய்க்கிய நாடுகள் சபையின் அமைதிக் காப்புப் பணியில் பணியாற்றி காங்கோ ஜனநாயகக் குடியரசிற்கு அமைதிப் படையை அனுப்பியது.
* செனகலின் இசைப் பாரம்பரியம் ஆப்பிரிக்க முழுவதும் அறியப்பட்டதொன்றாகும். இசைக் கருவி தாமா இன்னும் பல இனக் குழுக்களால் பயன்படுத்தப்படுகிறது.