பெருக்கலுக்கு ஒரு குறுக்கு வழி!
சுலமான கணக்குமுறை
9, 99, 999, 9999 ஆகிய எண்களுடன் நீங்கள் விரும்பும் எண்ணைப் பெருக்கி விடையைக் கண்டுபிடிக்க எளிமையான வழி.
இந்த எளிய வழிக்கு ஒரே ஒரு நிபந்தனை. மேலே உள்ள எந்த எண்ணை நீங்கள் எடுத்துக் கொள்ளப் போகிறீர்களோ, அதை விட பெருக்கப் போகும் எண்ணின் இலக்கம் அதிகமாக இருக்கக் கூடாது.
அதாவது, 999 உடன் பெருக்கப் போகும் எண் ஓரிலக்க, ஈரிலக்க, மூவிலக்க எண்ணாக இருக்கலாம். நான்கு இலக்க எண்ணாக இருந்தால் இவ் வழி பொருந்தாது.
இனி, கணக்குக்குச் செல்வோமா?
எ.கா: 86 என்ற எண்ணை 99 உடன் பெருக்க வேண்டுமானால், 86-_1 = 85. இதை வைத்துக் கொள்ளுங்கள். இது விடையின் முதல் பகுதி!
அடுத்து, 99_85 = 14 இது விடையின் அடுத்த பகுதி.
இரண்டையும் சேர்த்து எழுதுங்கள் 8514 _ இததான் விடை!
இதே 86அய் 999 உடமன் பெருக்க வேண்டுமானால்…
86_1 = 85; 999_85 = 914
விடை: 85914
இப்படி நீங்களும் பல எண்களை முயற்சித்து விடையைக் கண்டு வியக்கலாம். பிறரையும் வியப்படையச் செய்யலாம். ஆனால் ஒன்றை மனதில் கொள்ளுங்கள். பெருக்கல் விதிகளை மனதில் கொண்டு கணக்கிடும் முறையே அனைத்திலும் எளிமையானதாகும். மேற்கண்ட முறை போன்ற இன்னும் பல குறுக்கு வழிகள் எல்லாம் வியப்புக்கு மட்டுமே உரியவை.
– இரா.ரோஷன், மு.அர்ஷத்,
எட்டாம் வகுப்பு,
பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
பாபநாசம்.