திசை அறிதல்

கவிஞர் தங்கராஜா, தென்காசி
கிழக்கே பார் கிழக்கே பார்
காலைச் சூரியன் தெரிவதைப் பார்
வங்கக் கடலின் அழகைப் பார்!
மேற்கே பார் மேற்கே பார்
மாலைச் சூரியன் திசையைப் பார்
அரபிக் கடலின் அலையைப் பார்
தெற்கே பார் தெற்கே பார்
தென்றல் வீசும் திசையைப் பார்
இந்தியப் பெருங்கடல் இசையைப் பார்
வடக்கே பார் வடக்கே பார்
வானம் முட்டும் இமயம் பார்
வாடைக் காற்று வருகுது பார்
புழுவாயினும் பழம் தின்னட்டுமே!
விடை: 1