கொஞ்சம் கற்போம்…
”தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்”
கே.பாண்டுரங்கன்
வினைச்சொல் (Verbs)
‘Verb’ = வினை -= வேலை
வினைச்சொல் ‘Verb’ எதற்கு பயன்படுத்தப்-படுகிறது தெரியுமா?
அதாவது,
ஒரு வரியில், ஒரு சொற்றொடரில் (sentence-இல்) ஒரு வேலை (work) செய்யப்படுகிறது என்பதை தெரிவிக்கவே.
எ.கா:
விளையாட்டுத் திடலில் சிறுமிகள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.
Girls are playing cricket in the playground
மேற்கண்ட சொற்றொடரில்,
விளையாடுகிறார்கள் என்பதில் விளையாடு என்பது வினைச்சொல்.
Playing என்பதில் வரும் “Play” என்பது verb, அதாவது வினைச்சொல்.
விழாவில் சிறுவர்கள் கரும்பு தின்கிறார்கள்.
Boys are eating Sugercane in the festival.
மேற்கண்ட சொற்றொடரில்… eat என்பது என்ன? வினைச்சொல் (verb) அல்லவா?
வாக்குச்சாவடி அருகில் வாக்காளர்கள் நிற்கிறார்கள்
The voters are standing near the polling place.
மேற்கண்ட சொற்றொடரில்… stand என்பது என்ன?
வினைச்சொல் (verb) அல்லவா!
இது மாதிரி ஆயிரக்கணக்கான வினைச் சொற்கள் (VERBS) உள்ளன.
அவை எல்லாமே வேலையைக் குறிக்கும்.
கீழே சில வினைச்சொற்களை பார்ப்போம்.
இந்த வினைச்சொற்களால்தான் ஆங்கிலத்தில் அல்லது தமிழில் சொற்றொடர்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஒவ்வொரு வினைச்சொல்லும் (verb) தமிழிலோ ஆங்கிலத்திலோ பலவிதமான உருவெடுத்து வேடமிட்டு சொற்றொடர்களை வார்த்தை அலங்காரங்களை உருவாக்கக் காரணமாக அமைகின்றன. எப்படி என்றால், Go என்றால் போ என்று பொருள் அல்லவா?
இந்த Go வை
“To go” என்று எழுதலாம்.
“Going” என்று எழுதலாம்.
“Gone” என்று எழுதலாம்.
“Goes” என்று எழுதலாம்.
அதேபோல் present என்றால் = பரிசளி என்று பொருள்.
He presented என்றால் = பரிசளித்தான் என்று பொருள்.
Presenting என்றால் = பரிசளித்துக் கொண்டு என்று பொருள்.
to present என்றால் = பரிசளிக்க என்று பொருள்.
அத்தகைய வினைச்சொற்களை (verb) நிறைய தெரிந்து இருந்தால் கொண்டாட்டம்தானே!
அதாவது தமிழில் நாமறிந்த வினைச்சொற்களை ஆங்கிலத்திலும் அறிந்து கொண்டால் மிக மிகச் சுவையாக இருக்குமல்லவா?
இங்கே சில வினைச்சொற்களைக் (verbs) கொடுத்துள்ளேன். அதைப் பார்த்து… கைகோத்து… கற்றுக் கொள்ளுங்கள்… இன்னும் ஏராளம் கற்றுக்கொண்டால் கொண்டாட்டமாக இருக்கும்!
Attract = ஈர்(த்தல்)
acknowledge = உறுதிப்படுத்து
allow = அனுமதி
attack = தாக்கு
accept = சம்மதி
attempt = முயற்சி செய்
accuse = குற்றம் சாட்டு
admin = நிர்வகி
avoid = தவிர்
agree = ஒப்புக்கொள்
Be = இரு
bend = வளை
bind = கட்டு
borrow = கடன் பெறு
blink = முழி(த்தல்)
bet = பந்தயம் கட்டு
born = பிற(த்தல்)
beat = அடி(த்தல்)
boil = கொதிக்க வை
buy = (பணம் கொடுத்து) வாங்கு
broadcaste = ஒலிபரப்பு
become = உருவாகு (ஆகு)
இன்னும் ஏராளமான வினைச் சொற்களை
நீங்கள் அகராதியில் படிக்கலாம்.