குறிஞ்சி மலர்
குறிஞ்சி —_ கடல் மட்டத்தில் இருந்து 600 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் மலைப் பிரதேசத்தில் வளரும் செடி. குறிஞ்சி மலர்கள் ஒன்பதாண்டுகளுக்கு ஒருமுறை பூக்க ஆரம்பித்து பன்னிரண்டு ஆண்டுகள் வரை பூத்துக்கொண்டே இருக்கின்றன.
தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல், பழனி மலைப் பகுதியில் குறிஞ்சிச் செடிகள் காணப்படுகின்றன. இலங்கையிலும் குறிஞ்சிச் செடி உண்டு. குறிஞ்சிச் செடி கூட்டம் கூட்டமாக வளரும். பூக்கும்போதும் அப்படியே! குறிஞ்சி மலரின் நிறம் நீலம். அதனால் இவை பூக்கும் காலத்தில் மலைப்பகுதி முழுவதும், ஒரே நீல நிறமாகத் தோன்றும்.
குறிஞ்சிச் செடி பன்னிரண்டாவது ஆண்டில் காய்ந்து விடுகின்றது. குறிஞ்சிப் பூவில் நிறைய தேன் உண்டு. அது நல்ல சுவையுள்ளது. குறிஞ்சி பூக்கும்போது தேனீக்கள் குறிஞ்சிப் பூவைத் தவிர வேறு பூவில் தேன் எடுப்பது இல்லை. அதனையே குறிஞ்சித் தேன் என்று குறிப்பிடுகிறார்கள்.
தமிழ் இலக்கியத்தில் முதல் திணையாக குறிஞ்சி நிலம் கூறப்படுகிறது. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். குறிஞ்சிச் செடியில் பல்வேறு ரகங்கள் உண்டு. அவை வெவ்வேறு காலங்களில் பூக்கும். உலகம் முழுவதும் 250 வகைக் குறிஞ்சிகள் இருக்கினறன. அதில் 46 வகைக் குறிஞ்சியினங்கள் தமிழக மலைகளில் காணப்படுகின்றன. ஒரு முறையே பூத்தாலும் தேனீக்கள் உதவியோடு மகரந்தச் சேர்க்கை மூலம் அடுத்த தலைமுறையை உருவாக்கிவிட்டே அவை இறக்கின்றன.