தெரிந்து கொள்வோம்
உலக நாகரீகத்தின் மூத்த குடிகள் நாங்கள் என பெருமை கொள்வோம், அதற்கான அறிவியல் ஆதாரங்களும் வந்துவிட்டன.
கனகவல்லி என்ற பள்ளி மாணவி அவள் குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் இனிப்பு கொடுத்தாள். அந்த குடியிருப்பு உத்தரபிரதேசத்தில் ஒரு சிறு நகரத்தில் உள்ள குடியிருப்பு. அனைவரும் இனிப்பு எடுத்துக் கொண்டு “உனக்கு பிறந்த நாளா” என்று கேட்டார்கள்.
“இல்லை, எங்கள் ஊரில் உள்ள ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பொருட்களை கரிம ஆய்வின் மூலம் சோதனை செய்ததில் எங்கள் (தமிழர்) நாகரிகம் 3000_ம் ஆண்டு பழமையானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றாள். இதைக் கேட்டு அனைவரும் அவளுக்கு வாழ்த்துச் சொன்னார்கள்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கனகவல்லியின் அம்மா, “உனக்கு இது தேவையில்லாத வேலை” என்று எச்சரித்தார்.
“அம்மா நாம் யாரையாவது எந்த பண்பாட்டையாவது குறை சொன்னோமா? நம் பண்பாட்டுக்கு ஓர் அறிவியல் அடிப்படைச் சான்று கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியை தெரிவிக்கிறோம் அவ்வளவுதானே” என்று பதில் சொல்லிவிட்டாள்.
இப்படி அனைவருக்கும் இனிப்பு கொடுத்து வரும் போது அவளுக்கு பிடித்த மாயா அத்தைக்கும் இனிப்பு கொடுத்தாள். மாயா அத்தை செய்தியைக் கேட்டு பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தெரிவித்து விட்டு கனகவல்லியிடம், “சரிப்பா, கரிம ஆய்வு அதாவது கார்பன் டேட்டிங் (Carbon Dating) என்று சொன்னாயே அப்படி என்றால் என்ன?’’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு கனகவல்லி, “உண்மையில் எனக்கு அது குறித்து சரியான புரிதல் இல்லை” என்று கூறினாள். அதற்கு மாயா அத்தை,
“அதைத் தெரிந்துகொண்டால், இன்னமும் நல்ல புரிதலோடு உங்களின் நாகரிக வரலாற்றைக் கூறலாமே” என்று கூறி விவரிக்கத் தொடங்கினான். கரிம ஆய்வு அதாவது கார்பன் டேட்டிங் (Carbon Dating) சரி! கரி அதாவது கார்பன் என்பது ஒரு தனிமம். நம்ம உடம்புல நிறைய கார்பன் இருக்கு! சரி, கார்பன் அணுக்குள்ள எத்தனை புரோட்டான் எத்தனை எலக்ட்ரான் இருக்கு? எத்தனை நியூட்ரான் இருக்கு? என்று பார்ப்போம்.
கார்பன் அணுவுல 12 புரோட்டான், 12 நியூட்ரான், 12 எலக்ட்ரான் இருக்கும். கார்பனைக் ‘Carbon 12’ என்று கூறுவார்கள். அதே போல் ‘கார்பன் 14’ என்று ஒரு தனிமம் இருக்கு. Carbon 14-ல் இரண்டு நியூட்ரான் அதிகமா இருக்கும். அங்க 12 நியூட்ரானுக்கு பதிலா 14 நியூட்ரான் இருக்கும்.
கார்பன் 14 -கதிர்களை வெளியிடும். நம் உடம்புல எவ்வளவு கார்பன் 12 இருக்கோ அதே அளவுதான் கார்பன் 14-ம் இருக்கும். நாம் உயிரோட இருக்கிற வரைக்கும் வெளியாகுற கார்பன் 14 -அய் நம் உடம்பு வெளிய இருந்து எடுத்துக்கும். அதாவது உயிரோடு நம்ம உடம்புல கார்பன் 12-ம், கார்பன் 14-ம் சம அளவுல இருக்கும்.
ஒரு பொருள் செயலிழந்த பிறகு, எடுத்துக்-காட்டாக பயன்பாட்டில் இருக்கும் மண்பானை புதையுண்ட பிறகு கார்பன் 14 ரோடியோ அலைகளாக வெளியேற ஆரம்பிக்கும். ஒரு கிராம் கார்பன் 14, கதிராக வெளியேறி, அரை கிராம் கார்பன் 14 ஆகிறதுக்கு தோராயமா 5600 ஆண்டுகள் ஆகும்.
அதாவது ஒரு பொருளில் உள்ள கார்பன் 14, அதன் எடைல பாதி ஆகுறதுக்கு 5600 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். இதை அரைவாழ்நாள் என்று கூறுவார்கள். ஒரு பழமையான பொருளின் வயதை கண்டுபிடிக்க பொருளின் சிறு பகுதியை எடுத்து அதில் இருக்கிற கார்பன் 12 அளவை கணக்கிடுவாங்க. அதை 100 சதவிகிதம் என்று எடுத்துக்கொள்வார்கள். பிறகு அதில் கார்பன் 14 எவ்வளவு என்று கணக்கிடுவார்கள்.
கார்பன் 12 இருக்கிற அளவில் கார்பன் 14 எவ்வளவு என்று பார்ப்பார்கள். அதை வைத்து கார்பன் 14 சதவிகிதத்தைக் கணக்கிடுவார்கள். இப்போ Carbon 14 பாதி அளவுதான் இருக்கிறது என்றால் அது 50 சதவீதம் இருக்கிறது என்று பொருள்.
கார்பன் 14 100%லிருந்து 50%ஆக 5600 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். அப்போது அந்தப் பொருளின் வயது 5600 ஆண்டு. ஒருவேளை கார்பன் 14 25 சதவீதமாக இருந்தால் 100லிருந்து 50ஆக 5600 ஆண்டுகள். 50லிருந்து 25ஆக இன்னொரு 5600 ஆண்டுகள். மொத்தமாக 5600 + 5600 = 11200 ஆண்டுகள். இதை அடிப்படையாக வைத்து ஒரு விதியை உருவாக்கி அந்த விதியின் அடிப்படையில் பொருளின் வயதைக் கண்டுபிடிப்பார்கள்.
இதுதான் Carbon Dating! கதிரியக்கக் கரிமக் காலக் கணிப்பு என்பது சரியான கலைச்சொல். எப்பவுமே தமிழ் மொழி, தமிழ் மொழின்னு கொண்டாடினா மட்டும் போதாது. எந்த முறைல தமிழ் தொன்மையானதுன்னு தெரிஞ்சி வைச்சிருக்கணும். அதுதான் முக்கியம், சரியா? இந்தியா மாதிரி நாட்டுல, மொழி அடிப்படைவாத நோக்கத்துல இந்தி ஆதிக்கம் செலுத்த காத்துக்கிட்டு இருக்கும் வடமாநில அரசியல்வாதிகள் இருக்கிற நாட்டுல, அந்தந்த மாநில மக்கள் அவுங்க அவுங்க மொழியை காப்பாத்துறதுக்கு அறிவியல்பூர்வமா விழிப்பா இருக்கணும்” என்று மாயா அத்தை கூறினாள். இதைக் கேட்ட கனகவல்லி, இப்போது நம் நாகரிகத்தைப் பற்றிய அறிவியல் உண்மையை எவ்வாறு கண்டுபிடிக்கிறார்கள் என்பதையும் அறிந்து, நேற்று வந்த இந்திக்காரர்களுக்கு நம் நாகரிகம் எவ்வளவு பழமையானது என்று எடுத்துரைக்கப் புறப்பட்டார்.
குறிப்பு: வாட்ஸ் அப் மூலம் நமக்கு வந்த கட்டுரை இது. எழுதியவர் யார் என அதில் குறிப்பு இல்லாததால் பெயரின்றியே வெளியிட்டிருக்கிறோம். எழுதியவர் பெயர் தெரிந்தால் வரும் இதழ்களில் குறிப்பிடுவோம். –
– பொறுப்பாசிரியர்