உலக நாடுகள் : தென் ஆப்பிரிக்கா( South Africa)
அமைவிடமும் எல்லையும்:
* தென்னாப்பிரிக்க நாடு ஆப்பிரிக்காவின் தென்முனையில் அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலின் அருகே அமைந்துள்ளது.
* வடக்கில் நமீபியா, போட்சுவானா மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் உள்ளன.
* கிழக்கில் மொசாம்பிக் மற்றும் ஸ்விஸ்லாந்து அமைந்துள்ளன.
* நாட்டின் மொத்தப் பரப்பளவு 1,219,912 சதுர கி.மீ. (470,000 சதுர மைல்)
* தென்னாப்பிரிக்காவிற்கு மூன்று தலைநகரங்கள் உள்ளன. அவை கேப் டவுன், பிரிட்டோரியா, புளோயம் ஃபாண்டைன்.
மக்களும் மொழியும்:
* மக்கள் தென்னாப்பிரிக்கர் என அழைக்கப்படுகின்றனர்.
* 80.2% கறுப்பினத்தவர், 8.8% வெள்ளை இனத்தவர், 8.4% வேறு நிறம், 2.6% ஆசியர்கள் வாழ்கின்றனர்.
* ஆட்சி மொழிகள் மொத்தம் 11;
கூடுதலாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 8. அதில் தமிழும் ஒன்று.
* உலக மக்கள் தொகை வரிசையில் 25ஆவது இடத்தில் உள்ளது.
வரலாறு:
* உலகின் பழமையான தொல்பொருள் ஆய்வுத் தளங்கள் அதிகம் உள்ள நாடு தென் ஆப்பிரிக்கா.
* ஸ்டெர்க்ஃபாண்டின், குரோம்திராய் மற்றும் மகபன்ஸ்கட் குகைகளில் உள்ள பரந்த அளவிற்கான புதைபடிவங்கள், மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே இன்று உள்ள மனித இனமான ஹேமோ சேப்பியன்ஸ் உள்பட பல்வேறு மனித இனங்ள் இங்கு வாழ்ந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
* 1050ஆம் ஆண்டிலிருந்து சோசா மக்கள் குழு இங்கு வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
* 1487ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவை அடைந்த முதல் அய்ரோப்பியர் போர்ச்சுக்கீசிய கண்டுபிடிப்பாளரான பார்டலோமு டயஸ் ஆவார்.
* 1652ஆம் ஆண்டில் ஜேன் வான் ரீ பீக் கிழக்கிந்தியக் கம்பெனியின் சார்பாக மய்யம் ஒன்றை நிறுவினார்.
* இந்தோனேசியா, மடகாஸ்கர் மற்றும் இந்தியாவி-லிருந்தும் தொழிலாளர்கள் அடிமைகளாக டச்சுக்காரர்களால் கொண்டு செல்லப்பட்டனர்.
* 1795ஆம் ஆண்டில் நன்னம்பிக்கை முனைப் பகுதியை பிரித்தானியப் பேரரசு கைப்பற்றியது. கடல் பயணத்திற்காக
கேப் டவுனை பயன்படுத்திக் கொண்டது.
* 1806ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு கேப் டவுனை தனது காலனியாக இணைத்துக் கொண்டது.
* பிரிட்டிஷ் அரசு 1807இல் அதனுடைய உலகளாவிய கொத்தடிமை வணிகத்தை நிறுத்தியது. 1833இல் காலனி நாடுகள் அனைத்திலும் கொத்தடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது.
* 19ஆம் நூற்றாண்டில் சூலு மக்கள் அதிகாரத்திற்கு வந்தனர்.
* 1867ஆம் ஆண்டில் வைரங்கள் கண்டு-பிடிக்கப்பட்டன, 1884ஆம் ஆண்டில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது.
* 1931ஆம் ஆண்டில் வெஸ்ட்மினிஸ்டர் சட்டத்தின் மூலம் பிரிட்டிஷிடமிருந்து முழு சுதந்திரம் வழங்கப்பட்டது.
* 1961ஆம் ஆண்டில் வெள்ளையினத்தவர் மட்டுமே பங்கு கொண்ட வாக்கெடுப்பின்படி நாடு குடியரசானது.
* விடுதலைக்காகப் போராடி தண்டனை பெற்ற நெல்சன் மண்டேலா 1990ஆம் ஆண்டு விடுதலை பெற்றார்.
* 1994ஆம் ஆண்டில் பல இனங்கள் பங்குகொண்ட தேர்தல் நடைபெற்றது. அதில் கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா அதிபராக பதவியேற்றார்.
அரசு முறைகள்:
* பாராளுமன்ற அவைகளைக் கொண்ட அரசுமுறை. தேசிய கவுன்சில் (மேலவை) 90 உறுப்பினர்களைக் கொண்டது. தேசிய அசெம்பிளி (கீழவை) 400 உறுப்பினர்களைக் கொண்டது.
* தேர்தல் அய்ந்தாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும்.
* தேசிய அசெம்பிளியின் பெரும்-பான்மைக் கட்சியின் தலைவர் அதிபராக இருப்பார்.
* தற்போதைய அதிபர்: சிரில் ராமபோசா
* கேப் டவுன் அரசியல் தலைநகரமாகச்(Legislative Capital) செயல்படுகிறது.
நெல்சன் மண்டேலா
பொருளாதாரம்:
* நாணயம்: தென்னாப்பிரிக்க ‘ராண்டு’ என அழைக்கப்படும்.
* ஏராளமான கனிம வளங்கள் இருப்புக் கொண்ட நாடு.
* அய்.நா. வகைப்படுத்தலின்படி நடுத்தர வருமானம் உடைய நாடாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.
* கட்டுமானம், சுற்றுலா, விவசாயத் துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
* வைரங்கள், பழங்கள், தங்கம் உள்ளிட்ட உலோகங்கள், கனிமங்கள், சர்க்கரை மற்றும் கம்பளி முதலியவை ஏற்றுமதிப் பொருளாகும்.
* புதிய இயந்திரங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், பெட்ரோலியம், வேதிப் பொருட்கள் ஆகியவை இறக்குமதி பொருளாகும்.
மக்கள் கலாச்சாரம்:
* பன்மைத்துவம் கொண்ட நாடு தென்னாப்பிரிக்கா.
* ‘ஒற்றை’ப் பண்பாடு என மக்களை வலியுறுத்துவதில்லை.
* தென்னாப்பிரிக்க மக்கள் இசையில் பெரும் ஆர்வம் கொண்டவர்கள்.
* பெரிதும் அசைவ உணவை விரும்பி உண்ணுவார்கள்.
* சூலு, சுவாசி, சோசா பழங்குடிமக்கள் சேர்ந்து வாழ்கின்றனர்.
சுற்றுலா இடங்கள்:
* தென்னாப்பிரிக்கா பெரிய அளவிற்கு இயற்கை வாழ்விடங்களைக் கொண்டுள்ளது.
* டிராகன்ஸ்பெர்க்கில் அமைந்திருக்கும் ஜெசுத்தி மலை (3,408 மீ) உயரத்தில் அமைந்த மிகப் பெரிய மலையுச்சியாகும்.
* ஜோகன்னஸ்பர்க் நகரில் சுண்ணாம்புக்கல் மலையில் இயற்கையாக அமைந்துள்ள குகை உலகப் புகழ்பெற்ற ஒன்றாகும். இது ‘மனித குலத்தின் தொட்டில்’ என அழைக்கப்படுகிறது.
* சாகசக்காரர்களுக்குப் பிடித்தமானது பில் ஹாரோபின் பலூன் சவாரி.
* மரோபெங்க் என்ற இடத்தில் மனித குலம் எவ்வாறு தோன்றியது, கண்டங்கள் எவ்வாறு இடம் பெயர்ந்தன என்பதை ஒலி _ ஒளிக் காட்சியின் மூலம் விளக்குகின்றனர்.
* தனியார் வனவிலங்கு சரணாலயங்களுக்கு தாராளமாக அனுமதி வழங்கப்படுகிறது. அவற்றில் வனவிலங்குகளை அருகிலிருந்து காண முடிகிறது.
* தென்னாப்பிரிக்காவில் ஜாகர் பவுண்டன்(Jagers Fontein) என்ற இடத்தில் இருக்கும் வைரச் சுரங்கத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம்.
* ஜோகன்ஸ்பார்க்கில் காந்தியாருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தென்னாப்பிரிக்காவில் காந்தியின் வாழ்க்கைக் குறிப்புகள் பொறிக்கப்-பட்டுள்ளன. காந்தியாருக்கு பெரிய சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.
விளையாட்டு:
* கால்பந்து, ரக்பி மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை மக்கள் விரும்பி விளையாடுகின்றனர்.
* ‘ரக்பி’ உலகப் கோப்பையை முதல் முயற்சியிலேயே தென்னாப்பிரிக்கா அணி வென்றது.
* 2010ஆம் ஆண்டு பிபா (திமிதிகி) கால்பந்து உலகக் கோப்பையை சிறப்பாக நடத்தியது.
* தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் வீரர்கள் உலகப் புகழ்பெற்றவர்கள்.
காந்தியாரும் தென்னாப்பிரிக்காவும்:
* காந்தியார் முதன்முதலில் தன் அடிமைத்தனத்தை உணர்ந்த இடம்.
* காந்தியாரின் அகிம்சைவாதத்தை கருப்பினத் தலைவரான நெல்சன் மண்டேலா பின்பற்றினார்.
* தென்னாப்பிரிக்காவில் இந்தியருக்கான போராட்டத்தில் தில்லையாடி வள்ளியம்மை உள்ளிட்ட தமிழர்கள் காந்தியாருக்கு உறுதுணையாக இருந்தனர்.
* எனினும் அங்கிருந்த இந்தியர்களுக்காகப் போராடிய கந்தியார், அங்கிருந்த கருப்பின மக்களை இனவெறுப்போடு அணுகினார் என்று இன்றைய ஆப்பிரிக்க இளைஞர்கள் எதிர்ப்புகாட்டுகின்றனர்.