திரைப் பார்வை
பறக்கும் யானை
‘டம்போ’
ரித்திகா
டிஸ்னி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாத கோடை விடுமுறையில் கற்பனை கதாபாத்திரமான ‘டம்போ’ என்ற பறக்கும் யானையைப் பற்றிய திரைப்படத்தை வெளியிட்டது. உலகெங்கும் குழந்தைகளைக் கவர்ந்த, பெரிய காதுகள் கொண்ட பறக்கும் யானை ‘டம்போ’ படத்தைப் பார்த்த பெரியார் பிஞ்சு ரித்திகா, தான் ரசித்த காட்சிகளை இங்கு விவரிக்கிறார்.
1. டம்போ, சர்க்கஸ்ல பறந்துகிட்டு இருக்கும். அப்போது அது கீழ இருந்த வாளியை நெருங்கிப் பறந்து போய், தண்ணி எடுத்து நெருப்பை அணைக்கும். அப்படியே கீழ போய் தும்பிக்கையில் கொஞ்சம் தண்ணி எடுத்து தன்னைக் கிண்டல் பண்ணின பசங்க முகத்திலும் ஊத்திடும்.
2. டம்போவைப் பற்றி பத்திரிகையில் செய்தி வரும். அப்ப DreamLand என்ற பொழுதுபோக்குப் பூங்காவின் உரிமையாளர் அதைப் பார்க்க வருவார். அவருடன் அங்கு வேலை செய்யும் கோலட்ங்கிறவங்களும் வருவாங்க. அப்போ டம்போ, கோலட் போட்டு இருக்கும் செருப்பில் உள்ள feather (இறகு) பார்க்கும். கோலட் ஒரு நீண்ட கவுன் போட்ருப்பாங்க. அந்த கவுன் featherரை மறைச்சிடும். டம்போ கோலட்கிட்டே போய் கவுனைத் தூக்கிப் பார்க்கும். அப்ப கோலட் திரும்புவாங்க. அப்ப அவங்களைப் பார்த்து பயந்து பின்னாடி போயிடும்.
3. கோலட் டம்போவுக்குப் பயிற்சி கொடுக்க அதுகிட்ட போவாங்க. அப்போ டம்போ பின்பக்கத்தைத் திருப்பி காமிச்சிட்டுப் போகும்
4. Power Operating Roomக்கு கோலட்டும், டம்போவும் போவாங்க. அப்ப கோலட் அங்க இருக்கிற ஆப்பரேட்டர்ஸ்கிட்ட என்னவோ சொல்லுவாங்க. டம்போவும் அதே போல இமிடேட் பண்ணி தும்பிக்கையைத் (trunk) தூக்கி சொல்றமாதிரி செய்யும். அதுக்கப்புறம் கோலட்,gear box கிட்ட போய், அதை இழுப்பாங்க. டம்போ அதைப் பார்த்துட்டு, அதுவும் இழுக்கும்.
5. கடைசில டம்போ அதனுடைய அம்மா கிட்ட போயிடும். அப்ப அவங்க காட்டுக்கு உள்ள நடந்து போய்கிட்டு இருப்பாங்க. அப்ப அங்க ஒரு அருவி இருக்கும். அங்க எல்லா யானையும் தண்ணி குடித்துக் கொண்டு இருக்கும். எல்லா யானையும் டம்போ வர்றதைப் பார்த்துட்டு, அவங்க எல்லாரும் தும்பிக்கையைத் தூக்குவாங்க. அப்ப டம்போ றெக்கை விறிச்சிகிட்டு பறந்து அப்படியே அருவில நனைஞ்சிட்டு அம்மா நிற்கிற இடத்துக்குப் போய்டும்.
டம்போ’ படத்தில் வர்ற சில காட்சிகள், ஃபெர்டினான்ட் என்ற படத்தை ஞாபகப்படுத்தியது. ஃபெர்டினான்ட் படத்தில் எருமை மாடு வந்து பூவை முகர்ந்து பார்க்கும். டம்போ படத்தில் டம்போ இறகு இருந்ததைப் பிடிக்கப் பார்த்து, பறந்து போகும்..