நூல் அறிமுகம்

நூல்: சிறுவர் கதைப் புதையல்
ஆசிரியர்: சொ.பிரசன்னபாரதி
வெளியீடு: சார்க் பதிப்பகம், நெ.28,
டாக்டர் அம்பேத்கர் சாலை, கோடம்பாக்கம், சென்னை-24.
செல்: 9025044447.
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்-களுடன் சேர்ந்து குழந்தைகளும் இயந்திர வாழ்க்கையில் மாட்டிக் கொள்கின்றனர். உறவுகளை அணுகுதல், சமூக ஈடுபாடு, இயற்கைச் சூழலுடன் கூடிய கிராமத்து வாழ்க்கை, நற்பண்புகள், ஒழுக்கம் போன்றவற்றை எளிய முறையில் குழந்தைகளிடத்தில் சேர்க்கும் வகையில் சிறுவர் கதைப் புதையல் என்னும் நூலை சொ.பிரச்சன்ன பாரதி அவர்கள் சமூக அக்கறையுடன் எழுதியுள்ளார். இதில் குட்டி ஆடு, பேருந்து நிலையச் சிறுமி, நிஜக்கதை, ஓயாத அலைகள், தினமும் காணும் சிறார்கள், தேநீர் கடையில் தாத்தா போன்ற சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை.