செய்து அசத்துவோம்
தேவையான பொருட்கள்:
1. தடிமனான, ஏதாவது ஒரு நிற, நீள் செவ்வக வடிவிலான அட்டை.
2. ஜெம் க்ளிப்
3. கட்டர்
4. ஸ்கேல்
5. பென்சில்.
செய்முறை:
1. படம் 1இல் காட்டியபடி நீள் செவ்வக வடிவ அட்டையை மேலும், கீழுமாக சரி சமமாகப் பிரித்து கோடு போட்டுக் கொள்ளவும்.
2. படம் 2இல் காட்டியபடி மேல் பக்கத்தில் சரிசமமாக இடது, வலதுபுறமாக நடுவில் ஒரு கோடு வரைந்து கொள்ளவும்.
3. அதை படம் 3இல் காட்டியபடி வெட்டி பிரித்து வைத்துக் கொள்ளவும்.
4. படம் 4இல் காட்டியபடி கோடிட்ட இடங்களைக் குறித்துக் கொள்ளவும்.
5. படம் 5இல் காட்டியபடி வெட்டி உட்புறமாக மடித்துக் கொள்ளவும்.
6. இப்பொழுது படம் 6இல் காட்டியபடி கீழ்ப்புறத்தை மடித்து க்ளிப்பை மாட்டிக் கொள்ளவும். இப்பொழுது உங்களுக்கு அருமையான பாராசூட் கிடைத்துவிடும்.
7. இதை படம் 7இல் காட்டியபடி தலைகீழாகப் பிடித்துத் தூக்கி எறிந்தால் சுற்றிக்கொண்டே கீழே விழும்.
இது பார்ப்பதற்கு அருமையான பாராசூட் போல தோற்றமளிக்கும். செய்து அசத்துங்கள் பிஞ்சுகளே!