ராஜாவுக்கு குரங்கு காட்டிய நன்றி!
ஓர் ஊரில் ஒரு ராஜா மிகவும் ஆசையாக ஒரு தோட்டம் வைத்திருந்தார். அந்த தோட்டத்தில் இருந்து வரும் பழம், காய்கறி ஆகியவற்றை மிகவும் விரும்பி உண்பார். ஒரு நாள் அந்த தோட்டத்தில் இருந்து பழங்கள் வரவில்லை. சிப்பாய்களிடம் ராஜா ஏன் என்று விசாரித்தார். அந்த சிப்பாய் “நம் தோட்டத்தில் குரங்குகள் நிறைய உள்ளது. அதுதான் காரணம்” என்று கூறினார். கோபப்பட்ட ராஜா தனது சிப்பாய்களிடம் அந்த குரங்குகளை வேட்டையாடும்படி உத்தரவு போட்டார். தோட்டத்தினுள் வில் மற்றும் அம்புகளுடன் நுழைந்த வீரர்களை கண்ட அந்த காட்டின் வயதான குரங்கு, தனது சிறு குழந்தை மற்றும் தன்னுடைய இனத்தை பாதுகாக்க எண்ணி, அந்த காட்டில் இருந்த உயர்ந்த கிளையுள்ள மரத்தில் அவற்றை ஏற்றிப் பாதுகாத்தது. அப்போது அந்த பக்கம் வந்த ராணி நடந்தவற்றை பார்த்து, ராஜாவிடம் அந்த குரங்கினைப் பாராட்டினார். அந்த குரங்கும் நன்றியுடன் அந்த தோட்டத்தினை நன்றாகப் பார்த்து கொண்டது. தன் இனத்துடன் மகிழ்ச்சியாக இருந்தது.
கருத்து: நாம் அடுத்தவர்க்கு உதவியாக இருந்தால் நமக்கு உதவியாகவும் இருப்பர்.
– ஜெ.நர்மதா,
இரண்டாம் வகுப்பு, ‘அ’ பிரிவு
பெரியார் நூற்றாண்டு நினைவு
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி