உலக நாடுகள் : நைஜீரியா
புவியியல், அமைவிடம் எல்லைகள்:
* மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு.
* மேற்கில் பெனின், கிழக்கில் சாட்டும், கேமரூனும் அமைந்துள்ளன.
* வடக்கில் நைஜரும், தெற்கில் கினியா வளைகுடாவும் சூழ்ந்துள்ளது.
* மொத்தப் பரப்பளவு 9,23,768 கி.மீ.
* தலைநகரம்: ‘அபுஜா’ .
* முக்கிய ஆறுகளாக நைஜரும், பெனவேயும் பாய்கின்றன.
வரலாறு:
* நைஜீரியாவில் பல நூற்றாண்டுகளாக பல்வேறுஅரசுகள் மற்றும் பழங்குடி மக்களால் ஆளப்பட்டுள்ளது.
* 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியது.
* 1914இல் தென் நைஜீரியா மற்றும் வடக்கு நைஜீரியா ஆகியவை இணைக்கப்பட்டன.
* 1960இல் சுதந்திரமான கூட்டமைப்பு நாடானது.
* 1967 முதல் 1970 வரை பல உள்நாட்டுப் போர்களால் பல உயிரிழப்புகளுக்கு உள்ளானதோடு, இராணுவ சர்வாதிகாரத்-திற்கும் உட்பட்டிருந்தது.
* 2011இல் அதிபர் தேர்தல் முதன்முறையாக நியாயமாக நடத்தப்பட்டது.
* இன்று நைஜீரியா ஆப்பரிக்க ஒன்றியத்தின் ஒரு நிறுவன உறுப்பினராகவும், அய்க்கிய நாடுகள், காமன்வெல்த் நாடுகள் மற்றும் OPEC உள்ளிட்ட பல பன்னாட்டு அமைப்புகளில் உறுப்பினராகவும் செயல்-படுகிறது.
மொழியும் மக்களும்:
* நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆங்கிலம்.
* பிராந்திய மொழியாக ஹௌசா, இக்போ, யொரூபா பேசப்படுகிறது.
* நாட்டின் தெற்குப் பகுதியில் கிறிஸ்துவர்களும், வடக்குப் பகுதியில் முஸ்லிம்களும் வாழ்கின்றனர்.
* மூன்று பெரிய இனக் குழுக்களான ஹீசா, இக்போ, யுவோர் மக்கள் அதிகமுள்ளனர்.
* மக்கள் நைஜீரியர் என அழைக்கப்படுகின்றனர்.
* அனைவரும் ஆங்கிலத்திலும், தங்கள் தாய்மொழியிலும் பேசம் பழக்கம் கொண்டுள்ளனர்.
* ஏறத்தாழ 15 கோடி மக்களைக் கொண்ட இந் நாடு உலக மக்கள் தொகை கணக்கீட்டில் ஏழாவது இடத்தில் உள்ளது.
அரசு முறைகள்:
* இதன் அரசு முறைகள் அமெரிக்க அரசினை ஒத்தவை.
* அதிபர் அதிகமான அதிகாரம் படைத்தவர்.
* மேலவை, கீழவை என இரண்டு அவைகள் உள்ளன.
* மேலவையில் 109 உறுப்பினர்களும், கீழவையில் 360 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
* நைஜீரிய மக்கள் குடியரசுக் கட்சி பெரிய அரசியல் கட்சியாக உள்ளது.
* தற்போதைய அதிபர்: முகம்மது புஹாரி
* 36 மாநிலங்களைக் கொண்டுள்ளது.
பொருளாதாரம்:
* நாணயம் நைஜீரிய நைரா (NGN) என அழைக்கப்படுகிறது.
* மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் விளங்குகிறது.
* வேளாண்மையில் கடலை, கோக்கோ, பனைமரத்து எண்ணெய் போன்றவை ஏற்றுமதியில் முக்கியமானவை.
* தொலைத் தொடர்புகள் துறையிலும் வேகமாக முன்னேறி, வளரும் நாடுகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
விளையாட்டு:
* கால்பந்தாட்டம் முக்கிய விளையாட்டாக மக்களால் விளையாடப்படுகிறது. தேசிய விளையாட்டாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
* கூடைப்பந்தாட்டமும் மக்கள் விரும்பி விளையாடும் ஒன்றாகும்.
பிற சுவையான செய்திகள்:
* இலக்கியத்திற்கான நோபல் பரிசை 1986-ஆம் ஆண்டு பெற்ற நைஜீரியாவின் கவிஞரும் நாடக ஆசிரியருமான வோலே சோயின்கா(Wole Soyinka) தான், ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து இப்பிரிவில் நோபல் பரிசு பெற்ற முதல் நபர் ஆவார்.
* நைஜீரியாவின் நாவல் ஆசிரியர் சினுவா அச்சிபே (Chinva Achehe) உலகப் புகழ் பெற்றவர்.
* மதச்சார்பற்ற நாடாக தன்னை அறிவித்துக்கொண்டு நடைமுறைப்படுத்தி வரும் நாடு*
* உலகிலேயே அதிக தங்கம் உற்பத்தி ஆகும் நாடு இதுவாகும்.
* 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் நைஜீரியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
* நைஜீரிய காட்டுப் பகுதியில் உள்ள தேக்கு மரம் ‘நைஜீரியத் தேக்கு’ என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும் வீட்டுக் கதவுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.