“தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்”
கரும்பின் சுவை நமக்குத் தெரியும். கரும்பின் சத்து இது… இது… இன்னது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? அதுபோல
இங்கே ஆங்கிலத்தில் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ நாம் தயாராவதற்காக ஆங்கிலத்தின் அடிப்படை விவரங்களைத் தெரிந்து கொண்டாக வேண்டும் அல்லவா?
இனி நாம் பார்க்கப் போவது TENSE பற்றி…
TENSE:
Tense என்றால் ’காலம்’ காலத்தை நாம் மூன்றாகப் பிரிக்கிறோம்.
கடந்த காலம் (Past Tense), நிகழ்காலம் (Present Tense), எதிர்காலம் (Future Tense).
ஆனால், ஆங்கிலத்தில் இம்மூன்று காலங்களும் 12 ஆக பிரிக்கப்படுகின்றன.
ஒவ்வொன்றையும் நான்கு பிரிவாகப் பிரிக்கலாம். அதாவது 3X4 = மொத்தம் 12 வருகிறதல்லவா?
12 காலங்களை எப்படி நினைவில் வைத்துக் கொள்வது? அவை என்ன? எப்படிப் பயன்படுத்துவது?
அதற்கெல்லாம் பயப்படாதீர்கள்!
எளிய வழி இருக்கின்றது…
(1) Present Tense: இப்பொழுது [very now] நம் கண் முன்னாலேயே நடக்கும் நிகழ்வுகளைச் சொல்லும்போது Present Tense அதாவது நிகழ்காலம் என்போம்.
Easy Formula (எளிய சூத்திரம்) 1: Verb (நிகழ்கால வினைச்சொல்) அப்படியே வரும். [3rd person – singular] அதாவது படர்க்கை-ஒருமை ஆக இருந்தால் ‘s’ அல்லது ‘es’ வரும்.
(1) I drink Juice, (2) You drink juice, (3) He drinks juice, She goes home.
(2) Present Continuous Tense ஒரு செயல் இப்போது நிகழ் காலத்திலேயே தொடர்ந்து நடக்கிறது என்றால் அது Present Continuous Tense அதாவது நிகழ்காலத் தொடர்.
Easy Formula 2: is/am/are + ‘ing’ of verb [present participle]
எ.கா: நான் பழரசம் அருந்திக் கொண்டிருக்கிறேன்.
(1) I am drinking juice, (2) You are drinking juice, (3) He is drinking juice, She is going home.
(3) Present Perfect Tense ஒரு வேலை சற்றுமுன் நடந்து முடிந்து, ஆனால் நிகழ்காலத்தில் தொடராது இருப்பதுதான் Present Perfect அதாவது நிகழ்கால வினைமுற்று.
Easy Formula 3: Have + ‘past participle’ of verb
எ.கா: இப்போதுதான் நான் பழரசம் அருந்தி இருக்கிறேன்.
(1) Just now I have drunk juice, (2) You have drunk juice, (3) He has drunk juice, She has gone home.
(4) Present Perfect Continuous Tense அதாவது நிகழ்கால வினைமுற்றுத் தொடர் என்பது ஒரு வேலை இறந்த காலத்தில் தொடங்கி முற்றுப்பெறாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்றால் அது Present Perfect Continuous Tense அதாவது நிகழ்கால வினைமுற்றுத் தொடர்.
Easy Formula 4: have / has + been + “ing” of the verb [present participle]
எ.கா: நான் காலை முதல் சமைத்துக் கொண்டிருக்கிறேன்.
(1) I have been cooking since morning,
(2) You have been drinking juice for two hours, (3) He has been working from the morning, she has been going home.
(5) Past Tense கடந்த காலத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்ததைக் குறிப்பது.
Easy Formula 5: Past (கடந்த கால வினைச்சொல்) அப்படியே வரும்.
எ.கா: நான் பழரசம் அருந்தினேன்.
(1) I drank juice, (2) You drank juice, (3) He drank juice, She went home.
(6) Past Continuous Tense அதாவது கடந்த காலத் தொடர் என்பது கடந்த காலத்தில் ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து நடந்ததைக் குறிப்பது.
Easy Formula 6: was / were + ‘ing’ of verb. [present participle]
எ.கா: நான் பழரசம் அருந்திக் கொண்டிருந்தேன்.
(1) I was drinking juice, (2) You were drunking juice, (3) He was drinking juice, She was going to home.
(7) Past Perfect Tense அதாவது கடந்தகால வினைமுற்று என்பது கடந்த காலத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, ஒரு நிகழ்ச்சி முடிந்து பின்… தொடராமல் இருத்தல்.
Easy Formula 7: had + ‘past participle’ of the verb.
எ.கா: நான் பழரசம் அருந்தி இருந்தேன்.
(1) I had drunk juice, (2) You had drunk juice, (3) He had drunk juice, She had gone home.
(8) Past Perfect Continuous Tense அதாவது கடந்த கால வினைமுற்றுத் தொடர் என்பது கடந்த காலத்தில் ஒரு நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது என்பதைக் குறிப்பிடுவது.
Easy Formula 8: had + been + ‘ing’ of the verb. [present participle]
எ.கா: நான் பழரசம் அருந்தியபடியே இருந்தேன்.
(1) I had been drinking juice, (2) You had been drinking juice, (3) He had been drinking juice, She had been going home.
(9) Future Tense அதாவது எதிர்காலம் என்பது இனிமேல்தான் நடக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி
Easy Formula 9: shall/will + verb
எ.கா: நான் பழரசம் அருந்துவேன்
(1) I shall drink juice, (2) You will drink juice, (3) He will drink juice, She will go home.
(10) Future Continuous Tense அதாவது எதிர்காலத் தொடர் என்பது எதிர்காலத்தில் நடக்கின்ற ஒரு நிகழ்ச்சி முடியாமல் தொடர்தல்
Easy Formula 10: shall + be + ‘ing’ of verb [present participle]
எ.கா: நான் பழரசம் அருந்திக் கொண்டிருப்பேன்
(1) I shall be drinking juice, (2) You will be drinking juice, (3) He will be drinking juice, She will be going home.
(11) Future Perfect Tense அதாவது எதிர்காலத்தொடர் என்பது எதிர்காலத்தில் முடிந்து இருக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி. ஆனால் அது தொடராது.
Easy Formula (எளிய சூத்திரம்) 11: shall/will + have + ‘past participle’ of the verb.
எ.கா: நான் பழரசம் அருந்தி இருப்பேன்.
(1) I shall have drunk juice, (2) You will have drunk juice, (3) He will have drunk juice, She will have gone home.
(12) Future Perfect Continuous Tense அதாவது எதிர்கால வினைமுற்றுத்தொடர் என்பது எதிர்காலத்தில் முடிந்து இருக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி நடந்து தொடர்தல்… இந்த Tense பெரும்பாலும் பயன்பாட்டுக்கு இல்லை.
Easy Formula 12: shall/will + have + been + ‘ing’ of the verb (but this is not in use) [present participle]
எ.கா: நான் பழரசம் அருந்திக் கொண்டிருந்து இருப்பேன்.
(1) I shall have been drinking juice, (2) You will have been drinking juice, (3) He will have been drinking juice, She will have been going home.
இங்கே உள்ள 12 Tense -களை ஞாபகத்தில் எளிதாக படமாகவோ (Picture Tree) வரைபடமாகவோ (MIND MAP) நினைவில் வைத்துக் கொண்டால்… நினைவுக்குக் கொண்டுவருவது எளிதாகிவிடும்.
_ அடுத்த இதழில் Tense-களை படமாக (Picture TREE) பார்ப்போம்.
(தொடரும்)