UPPER CASE & LOWER CASE
கேள்வி: ஆங்கிலத்தில் கேப்பிட்டல் எழுத்துகளை ஏன் அப்பர் கேஸ் (Upper case) என்று அழைக்கிறார்கள்?
பதில்: சில தொழில்நுட்பங்கள் ஒரேயடியாக மாறிவிட்டாலும் அதன் எச்சங்கள் சொற்கள் வழியாக இன்றும் பயன்பாட்டில் இருக்கும். அப்படி ஒரு சொல்தான் அப்பர் கேஸ்.
எழுத்துகளை அச்சுக்கோத்து அச்சுத்துறை வளர ஆரம்பித்த காலகட்டம். எழுத்துகளை மொத்தமாக வார்ப்பில் செய்து வைத்துக்கொண்டு அதனைப் பயன்படுத்தி ஒரு பக்கத்துக்கான (Page) அச்சைக் கோப்பார்கள்.
ஆங்கில எழுத்துகளைக் கவனித்தால் கேப்பிட்டல் எழுத்துகள் குறைவாகவே பயன்படும். சொற்றொடர் தொடங்குகையிலும், பெயர்ச் சொற்களின் தொடக்கத்திலும் மட்டுமே வரும். அதனால் அவை அவ்வப்போது மட்டுமே அச்சுக் கோக்கத் தேவைப்படும். ஆனால், ஸ்மால் லெட்டர்ஸ்(Small letters) எனப்படும் எழுத்துகள் பக்கம் முழுக்க வரும்.
அச்சுக்கோக்க எழுத்துகள் வைத்திருக்கும் தட்டில், அச்சுக்கோப்பவர் கைக்கெட்டும் தூரத்தில் ஸ்மால் லெட்டர் எழுத்துருக்களை சிறு சிறு பெட்டிகளிலும்(Case), கொஞ்சம் மேலே கையை நீட்டி எடுக்குமாறு கேப்பிட்டல் எழுத்துருக்களை சிறு சிறு பெட்டிகளிலும் (Case) வைத்திருப்பார்கள்.
ஸ்மால் லெட்டர்கள் வைத்திருக்கிற பெட்டிகள் கீழே இருந்ததால் அவை Lower Case. கேப்பிட்டல் எழுத்துகள் மேலே இருந்ததால் அவை Upper Case.
– கே.சிவராமன்
(முகநூலிலிருந்து)