படக்கதை : பகுத்தறிவாளர் ஆபிரகாம் டி.கோவூர்
பகுத்தறிவாளர் ஆபிரகாம் டி.கோவூர்
உரையாடல் : உடுமலை
ஓவியம் : கி.சொக்கலிங்கம்
காரண காரியங்கள் தெரியாததால்; அச்சமும் அறியாமையும் மலிந்து, மூடநம்பிக்கைகள் உலகெங்கும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தன. குறிப்பாக இந்தியாவில், இன்னும் குறிப்பாக கேரளத்தில்…! அது 19ஆம் நூற்றாண்டு! இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளை எதிர்த்து, அறிவுபூர்வமாகப் போராட தென்னிந்தியாவில் ஆங்காங்கே பல்வேறு பகுத்தறிவாளர்கள் உருவாயினர். அவர்களுள் ஒருவர்தான் ஆபிரகாம் தோமஸ் கோவூர். இவர், கேரளாவிலுள்ள திருவள்ளா எனும் பகுதியில் ஏப்ரல் 10, 1898இல் பிறந்தவர்! இவர், பேய், பிசாசு, பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை ஆய்வு செய்து அவற்றை பொய் என்று மெய்ப்பித்தவர்! பகுத்தறிவாளரும், உளவியலாளரும், எழுத்தாளரும், ஆசிரியருமான இவரை, இதுபோன்ற பிரச்சினைகள் எப்போதும் தே…டி வரும்!