உண்மையான பிறந்தநாள் விழாக்கள்

தமிழகத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டி, மாநில உரிமை காத்த பெருமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் (செப்-15),
சுயமரியாதையும், பகுத்தறிவையும் ஊட்டி, நம்மை விழிப்புறச் செய்த நம் தாத்தா பெரியாரின் பிறந்தநாள் (செப்-17)
இவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவது என்பது, அவர்கள் கற்றுத் தந்த கொள்கைகளையும், பெற்றுக் கொடுத்த உரிமைகளையும், கட்டிக் காத்த உணர்வுகளையும் அழியாமல் காப்பதேயாகும்.