விந்தைப் பெரியார்

சாதிகளை வெறுத்தார்
சாத்திரத்தை மறுத்தார்
வேதியத்தை வெறுத்தார்
விதிவலியை மறுத்தார்
சடங்குகளை வெறுத்தார்
சங்கடங்கள் அறுத்தார்
மடமைகளைப் புதைத்தார்
மனிதநேயம் விதைத்தார்
பகுத்தறிவைக் கொடுத்தார்
பாதகங்கள் தடுத்தார்
வகுப்புரிமை கிடைக்கதம்
வாழ்க்கையினைக் கொடுத்தார்.
சிந்தையிலே இனிக்கும்
விந்தையவர் யாரு?
சிந்தனையை வளர்த்த
தந்தைபெரி யாரு.
பொதட்டூர் புவியரசன்