தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்
PREPOSITION
[முன்னிடைச்சொல்]
கே.பாண்டுரங்கன்
பிஞ்சுகளே! சென்ற இதழில் செய்வினை வாக்கியம்…
செயப்பாட்டு வினை வாக்கியம் பற்றித் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?
இப்போது ‘முன்னிடைச்சொல்’ அதாவது ‘Preposition’ பற்றிப் பார்ப்போமா?
Pre என்றால் முன்னால்; Position என்றால் நிலை.
‘Preposition’ என்றால் பொருளின் (Object) முன்னால் இணைக்கப்படுகின்ற சொல். அதாவது
முன்னிடைச்சொல் [Preposition]
(எ.கா: இல், …க்காக, மேலே, கீழே, மீது, அருகில், பின்புறம்…)
(Ex: In, on, above, beside, behind, of…)
ஒரு பொருளின் முன் வந்து அமர்ந்து அப்பொருள் எந்த நிலையில் உள்ளது என்று காட்டும் சொல் ‘Preposition’.
முன்னிடைச்சொற்கள் ஒரு சொல்லிலும் வரும்… இரண்டு, மூன்று சொற்களும் சேர்ந்து வரும். கீழே தரப்பட்டுள்ளதைப் பாருங்கள்.
one-word prepositions (after, in, under)
complex prepositions (apart from, because of, in spite of)
நாம் எளிதானதை முதலில் பார்ப்போம்.
A Preposition must have an object. அதாவது,
ஒவ்வொரு முன்னிடைச்சொல்லும் ஒரு பொருளைப் (Object) பெற்றிருக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு முன்னிடைச்சொல் (Preposition) தேவைப்படும்.
அதாவது ஒரு விமானத்தின் முன் இறக்கை (Propeller) எப்படி அந்த விமானத்தை மேலே உயர்த்தவும், முன், பின், இடம், வலம் என வேகமாக வானில் நீந்துவதற்கும் பயன்படுகிறதோ, அதைப் போலத்தான் Preposition. ஆங்கில வாக்கியத்தில் உள்ள பொருள்களை (Objects) ஒழுங்கான முறையில் வழி நடத்துவது இந்த Preposition தான்.
எடுத்துக்காட்டு பார்ப்போமா?
தமிழில்: அந்த விமானம் கடலின் மேலே பறக்கிறது.
ஆங்கிலத்தில்: The Aeroplane flies over the sea.
இங்கே கடலின் மேலே…. என்று தமிழில் வருவது ஆங்கிலத்தில், over the sea என்று வருகிறது.
என்னடா, தமிழில் பின்னால் வருகிறது. ஆனால், ஆங்கிலத்தில் முன்னால் வருகிறது என்று குழப்பமாக இருக்கிறதா?
மொழிக்கு மொழி இது வேறுபடலாம்… ஆனால், மாறுபடாது.
அதாவது பொருள் (Meaning) மாறுபடாது. ஆங்கிலத்தில் முன்னிடையாக உள்ளது. தமிழில் பின்னிடையாக நின்று ஒரே பொருளைக் கொடுக்கும்.
சரி, Prepositions என்பவை என்னென்ன?
நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும்
முன்னிடைச்சொற்களை (Prepositions)
எப்படி நினைவில் வைத்துக்கொள்வது -என்பதை, ஒரு ‘பெட்டிமுறை’ (Box Method) மூலம் பார்ப்போம்.
இங்கே சில Prepositions (முன்னிடைச் சொற்கள்) கொடுக்கப்பட்டுள்ளன.
In, On, Under, next to, Between, Among, Infront of, Behind, Above, Below, Near, Far from Object அதாவது பொருள் எந்த நிலையில் உள்ளது என்பதையும், எப்படி இந்த முன்னிடைச்சொற்கள் அங்கே போடப்பட்டன என்பதையும் மிக எளிதாக ‘பெட்டிமுறை’-ப்படி புரிந்துகொள்வோமா?
முதலில் இடம் சார்ந்த முன்னிடைச் சொற்களைப் பார்ப்போம்.
கீழே பந்து வெவ்வேறு நிலைகளில் உள்ளது. அருகே உள்ள படம் அதை விளக்கும். உங்களுக்கு மிக எளிதாகப் புரியும். எளிதில் நினைவு வைத்துக்கொள்ளலாம்.
படத்தை மிக நன்றாக கவனித்துப் பாருங்கள்.
Preposition of Places (இடம் குறிக்கும் முன்னிடைச் சொற்கள்)
The ball is in the box.
அந்தப் பந்து பெட்டியில் இருக்கிறது.
The ball is on the box.
அந்தப் பந்து பெட்டிமேல் இருக்கிறது.
The ball is under the box.
அந்தப் பந்து பெட்டியின் கீழே இருக்கிறது.
The ball is next to the box.
அந்தப் பந்து பெட்டிக்கு அடுத்து இருக்கிறது.
The ball is between two boxes.
அந்தப் பந்து இரண்டு பெட்டிகளுக்கு இடையில் இருக்கிறது.
The ball is among the boxes.
அந்தப் பந்து பெட்டிகளுக்கு நடுவே இருக்கிறது.
The ball is in front of the box.
அந்தப் பந்து பெட்டிக்கு முன்புறம் இருக்கிறது.
The ball is behind the box.
அந்தப் பந்து பெட்டிக்குப் பின்புறம் இருக்கிறது.
The ball is above the box.
அந்தப் பந்து பெட்டிக்கு மேல்புறம் இருக்கிறது.
The ball is below the box.
அந்தப் பந்து பெட்டிக்கு கீழ்ப்புறம் இருக்கிறது.
The ball is near the box.
அந்தப் பந்து பெட்டிக்கு அருகில் இருக்கிறது.
The ball is far from the box.
அந்தப் பந்து பெட்டியிலிருந்து சற்று தூரத்தில் இருக்கிறது.
(தொடரும்)