உலக நாடுகள் : குரோசியா(CROATIA)
அமைவிடமும் எல்லையும்:
* மத்திய அய்ரோப்பாவும் மத்தியதரைக்கடல் பகுதியும் பால்க்கனும் கூடும் இடத்தில் அமைந்துள்ள சிறு நாடு.
* வடக்கே சிலொவேனியாவும், அங்கேரியும் உள்ளன. கிழக்கே செர்பியா உள்ளது. தெற்கு, மேற்கு, வடகிழக்கு மற்றும் தென்கிழக்கிலும் பாஸ்னியா_ஹெர்ட்சேகோவினா உள்ளது.
* கடல் பகுதியாக ஏட்ரியாட்டிக் கடல் மேற்கிலும், தெற்கே மாண்ட்டெனக்ரோவும் உள்ளது.
மக்களும் மொழியும்:
* மக்கள் தொகை: 41,54,200.
* மக்கள் குரோவாசியர் என அழைக்கப்-படுகின்றனர்.
* மொழி _ குரோவாசியம், எழுத்து முறை_இலத்தீன்.
* மக்களில் குரோவாசியர் 90.42%, செர்பியர் 4.36%, ஏனையோர் 5.22%.
புவியியல்:
* பரப்பளவு: 56,538 ச.கி.மீ.
* தலைநகரம்: சாகிரேப், இது நாட்டில் பெரிய நகரமாகும்.
* முக்கிய ஆறுகள்: ஸாவா, டான்யூப், ட்ராவா.
* அட்சரேகை: 420 மற்றும் 70 N, தீர்க்கரகை 130 மற்றும் 300 E
* மிதமான வெப்பமும், மழையும் கொண்ட உற்சாகமான பருவநிலையைக் கொண்டது. குறைந்த வெப்பநிலை -35.50C (-31.90F) அதிகபட்சமான வெப்பநிலை: 42.80C (109.00F)
* 21 மாநிலங்களை உள்ளடக்கிய நாடு.
வரலாறு:
* குரோசியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலும் மக்கள் வசித்துள்ளனர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
* நியண்டர்டால், சால்கோலிதிக் போன்ற காலங்களில் வாழ்ந்தோரின் கலாச்சார எச்சங்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.
* ரோமானிய மாகாணங்களை உள்ளடக்கி இல்விரியர்கள் மற்றும் லிபர்னியர்கள் குடியேறியுள்ளனர். ரோமானியப் பேரரசின் ஒரு பகுதியாக குரோசியா இருந்துள்ளது.
* பேரரசர் டியோக்லெட்டியன் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. பின்னர் 5ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் நேபோஸ் ஆட்சி செய்தார்.
* 7ஆம் நூற்றாண்டில் அவார் மற்றும் குரோட் படையெடுப்பால் நகரம் அழிக்கப்பட்டு, உயிர் பிழைத்த ரோமானியர்கள் டுப்ரோவ்னிக் என்னும் நகரத்தை நிறுவினர்.
* குரோசியர்கள் 7ஆம் நூற்றாண்டில் டால்மேசியா, பன்னோனியா நகரத்தை நிறுவினர்.
* 1428 வாக்கில் டால்மேஷியாவின் பெரும்பகுதியை வெனிஸ் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
* 1593இல் குரோசிய_ஒட்டோமான் போர் நடைபெற்றது. அதில் ஒட்டோமான் தோல்வியால் எல்லைகள் உறுதியாகின.
* மீண்டும் ஒட்டோமான் போரினால், குரோஷிய மக்கள் ஆஸ்திரியாவை நோக்கிக் குடிபெயர்ந்தனர்.
* தொடர் போர்களுக்குப் பிறகு, 1918இல் யூகோஸ்லாவியா உருவாக்கம். குரோசியாவின் பனோவினாவை உள்ளடக்கி உருவாக்கப்படுகிறது. தொடர்ந்து போர் நிலை நீடிக்கிறது.
* 1991இல் குரோசிய அரசு யூகோஸ்லாவியாவுக்கு சுதந்திரம் அறிவித்தது.
* சுதந்திரமான நாடாக ஜூன் 25, 1991இல் அறிவிக்கப்படுகிறது.
* 1992இல் யூகோஸ்லாவிய இராணுவத்தோடு சண்டையிட்டு அதன் நிலப்பரப்பைக் கட்டுப்படுத்தியது.
* குரோசியாவின் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி ஃபிரான்ஜோ துஸ்மான் ஆவார்.
* 2013 முதல் அய்ராப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்து வருகிறது.
போக்குவரத்து:
* விமான முனையமாக ‘பிரான்ஜோ டூஜ்மன்’ விமான நிலையம் செயல்படுகிறது.
* சாலைப் போக்குவரத்து முக்கிய நகரங்களை இணைக்கிறது. பொதுப் போக்குவரத்து குறைவு.
* உள்நாட்டை இணைக்கும் வகையில் 1,100 கிலோ மீட்டருக்கு சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
* மின்சார ரயில் போக்குவரத்தும் முக்கிய சுற்றுலாத் தளங்களை இணைக்கிறது.
போக்குவரத்து:
♦ விமான முனையமாக ‘பிரான்ஜோ டூஜ்மன்’ விமான நிலையம் செயல்படுகிறது.
♦ சாலைப் போக்குவரத்து முக்கிய நகரங்களை இணைக்கிறது. பொதுப் போக்குவரத்து குறைவு.
♦ உஷீமீநாட்டை இணைக்கும் வகையில் 1,100 கிலோ மீட்டருக்கு சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
♦ மின்சார ரயில் போக்குவரத்தும் முக்கிய சுற்றுலாத் தளங்களை இணைக்கிறது.
பொருளாதாரம்:
* நாணயம்: குணா
* முக்கியத் தொழில்கள்: விவசாயம், கால்நடை வளர்ப்பு. பயிரிடும் வேளாண் உணவுகள்: ஆப்பிள், செர்ரி, உருளைக்கிழங்கு, கோதுமை.
* ஏற்றுமதி கனிமங்கள்: பெட்ரோல், துணிகள், பாக்சைட், நிலக்கரி.
* தென்கிழக்கு அய்ரோப்பாவில் கிரீசுக்கு பிறகு முன்னேறிய பொருளாதார வளத்தைக் கொண்ட நாடு.
* சுற்றுலாத் துறை மூலம் ஆண்டுக்கு 20% வருவாய் கிடைக்கிறது.
அரசு முறைகள்:
* பிரதமர்: அந்திரேய் பிளெங்கோவிச்
* அரசுத் தலைவர்: கொலிண்டா கிராபர் கிட்டா ரோவிக்.
* அரசாங்க அமைப்பு: ஒருமுக நாடாளுமன்றக் குடியரசு முறை.
* அரசின் அதிகாரம் சட்டமன்றம் மற்றும் நீதித்துறையின் கீழ் உள்ளது.
* அரசுத் தலைவரே அதிகபட்சமான அதிகாரங்களைக் கொண்டவர்.
* அய்ந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்பது நடைமுறையில் உள்ளது.
* ஒரு நபர் 2 முறை மட்டுமே பிரதமராகவும் மற்ற பதவிக்கும் போட்டியிட முடியும்.
உணவு:
* மீன், மாட்டு இறைச்சி இவற்றை விரும்பத்தக்க உணவாக எடுத்துக் கொள்கின்றனர்.
* வறுக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் சாலட் கீரைகள் ஆகியவற்றை அதிகம் விரும்பி உண்ணுகின்றனர்.
சுற்றுலாத் தலங்கள்:
* மிஜட் தீவின் குகைகள், அதனை ஒட்டிய பிக் ஏரி அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
* கிர்கா தேசியப் பூங்காவில் 850க்கும் மேலான தாவர இனங்களைக் காணலாம். நூறு நீர் வீழ்ச்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. பல வண்ணப் பறவைகளின் வாழ்விடமாக உள்ளது.
* ‘தாபோர்’ என்னும் அருங்காட்சியகம் பழங்கால ஆயுதங்கள் மற்றும் பொருள்கள் அடுக்கப்பட்ட பழைய அரண்மனையாகும். இது ஆய்வாளர்களுக்கு தொல்பொருள் ஆய்வுக்குரியதாக விளங்குகிறது.
* மெட்வெட்கிராட் கோட்டையும் அதற்குள் உள்ள தேவாலயங்களும் புகழ்பெற்றவை.
* லோவர் டவுனில் உள்ள அருங்காட்சியகம், டோபிரியோ நீரூற்று, பிரி நகரத்தில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகியவை கண்டுகளிக்கத்தக்கவை.
பிற தகவல்கள்:
* பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடு.
* மக்கள் 99.2% கல்வி வளர்ச்சி பெற்றுள்ளனர்.
* நாட்டில் உள்ள ட்ரோஜிர் (Trogir) கட்டடங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்-பட்டு உள்ளன.
* நாட்டின் பாதுகாவலராக புனித யோசேப்பு அழைக்கப்படுகிறார்.
* எட்டு தேசிய பூங்காக்கள் உள்ளன.
* இங்கு உற்பத்தியாகும் ஆலிவ் எண்ணெய் உலகப் புகழ் பெற்றது.
* வரலாற்றில் ரோமன், பைசான்டைன் பேரரசர்கள், வெனிஸ் ஆட்சியாளர்கள், ஹங்கேரிய அரசர்கள், சுல்தான் மற்றும் ஹப்ஸ்பர்க் வம்சத்தின் ஒட்டோமான் ஆட்சியாளர்கள் ஆகியோர் ஆட்சி செய்துள்ளனர். அவர்களது அரண்மனைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன.
விளையாட்டு:
* 2018ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டியில் வலுவான பல அணிகளை வென்று இறுதிப் போட்டியில் விளையாடியது.
* டென்னிஸ், நீச்சல், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது.