தண்ணீர் சேமிப்போம்!

கண்ணீர் சிந்திடும்
காலம் தவிர்த்திட
தண்ணீர் சேமிப்போம்!
முன்னோர் வெட்டிய
முறையில் நீர்நிலை
முழுமையைக் காண்பிப்போம்!
சிந்தனை தனிலே
சிறுமைக் குணத்தினை
சீக்கிரம் நீக்கிடுவோம்!
நாளும் செய்திடும்
நியாயச் செயலால்
நாமும் உயர்ந்திடுவோம்!
வளங்கள் சுரண்டியே
வாழ்ந்திடும் வாழ்வினை
வழக்கினில் நீக்கிடுவோம்!
குளங்கள், நீர்நிலை,
குட்டைகள் யாவும்
காத்திடத் துணிந்திடுவோம்!
கண்ணீர் சிந்திடும்
காலம் தவிர்த்திட
தண்ணீர் சேமிப்போம்!
மாறும் அறிவியல்
முறைகளில் நீர்நிலை
முழுமையைக் காண்பிப்போம்!
– பல்லவிகுமார், விருத்தாசலம்.