உலக நாடுகள் : வெனிசுலா(VENEZUELA)
அமைவிடமும் எல்லையும்:
* தென்அமெரிக்காவின் வடக்குக் கடற்கரையில் உள்ள நாடு.
* வடக்கில் அட்லாண்டிக் கருங்கடலும் கிழக்கில் கயானாவும் உள்ளன.
* தெற்கில் பிரேசிலும், மேற்கில் கொலம்பியாவும் உள்ளன.
புவியியல்:
* தலைநகரம்: கராகஸ் 10030`ழி66055`கீ
* உலகின் 33ஆவது பெரிய நாடு.
* வடக்குக் கடற்கரையின் நீளம் 2,800 கி.மீ.
* நாட்டின் மிக உயரமான மலை பைக்கோ பொலிவார். உயரம் 4,979 மீட்டர்.
மக்களும் மொழியும்:
* 1499ஆம் ஆண்டில் அமெரிகோ வெஸ்புகி இந்தப் பகுதிக்கு வந்தபோது ஏரிப் பகுதியில் இருந்த காலி வீடுகளைக் கண்டார். அது வெனிஸ் நகரை ஞாபகப்படுத்தியது. அதனை பிஸ்கோலா வெனிசியா என அழைத்தார். நாளடைவில் அப்பகுதி ‘வெனிசுலா’ என மாறி இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
* மக்கள் மொழி எசுப்பானியம், (Spanish) அதுவே ஆட்சி மொழியாகவும் உள்ளது.
* அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 26.
* மக்கள் வெனிசுவேலர் என அழைக்கப்படுவர்.
ஆட்சிமுறை:
* குடியரசுத் தலைவரே நாட்டின் தலைவராகவும் இருப்பார்.
* கூட்டாட்சி குடியரசு ஆட்சி முறை.
* குடியரசுத் தலைவர்: நிக்கோலசு மதுரோ
* ஜனநாயக முறையில் அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.
* குடியரசுத் தலைவர் அதிகமான அதிகாரங்களைப் பெற்றவர்.
வரலாறு:
* 1522ஆம் ஆண்டில் பழங் குடிமக்களின் எதிர்ப்பினால் ஸ்பெயினில் இருந்து வந்திருந்த ஸ்பெயினிய மக்கள் வேறு பகுதிக்குக் குடியேறி, புதிதாக ஒரு குடியேற்ற நாட்டை உருவாக்கினர்.
* 1811ஆம் ஆண்டில் தனது சுதந்திரத்தை அறிவித்த முதல் ஸ்பானிய அமெரிக்க காலனிகளுள் இதுவும் ஒன்றாகும்.
* அங்கு வெனிசுலா, கொலம்பியா கூட்டாட்சியின் ஒரு பகுதியாக 1830ஆம் ஆண்டு வரை இருந்து, அதன் பிறகு தனி நாடாக முழு சுதந்திரம் பெற்றது.
* 19ஆம் நூற்றாண்டில் வெனிசுலா அரசியல் கொந்தளிப்பையும் சர்வாதிகாரத்தையும் அனுபவித்தது.
* 20ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதி வரை பிராந்திய படைத் தளபதிகளான செடில்லோஸ் ஆதிக்கம் செலுத்தினார்.
* 1980 முதல் 1990 வரையில் பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுத்தது.
* 1998ஆம் ஆண்டு ஹியூகோ சாவேஸ் வெனிசுலா அதிபராக தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இந்த அரசு உலகமயமாக்கலுக்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது.
* 1999ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டமன்றம் துவக்கப்பட்டது. தென்அமெரிக்க கண்டத்தில் ஓர் கூட்டாட்சிக் குடியரசாகத் தொடர்ந்து ஆட்சி நடந்து வருகிறது.
பொருளாதாரம்:
* நாணயம்: வெசுவேலாவின் என அழைக்கப்படுகிறது.
* உலகின் முன்னணி எண்ணெய் ஏற்று-மதியாளராக உள்ளது.
* பெட்ரோலிய வளம் அதிகமாக உள்ள நாடு. முக்கியமாக அமேசான் படுகை, இல்லானோஸ் சமவெளி மற்றும் கரீபியன் கடற்கரை பகுதிகள் பெட்ரோலிய வளம் நிறைந்துள்ள பகுதிகளாகும்.
* காபி மற்றும் கோகோ போன்ற விவசாயப் பொருள்கள் நாட்டின் ஏற்றுமதியில் முக்கியமானதொன்று.
* நாட்டின் இயற்கை வளங்களான இரும்புத்தாது, தங்கம் மற்றும் பிற கனிமங்கள் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
* முக்கியமான ஏற்றுமதி நாடாக அமெரிக்கா உள்ளது. இந்தியாவுடன் ஏற்றுமதி விகிதம் 19 சதவிகிதமாகும்.
* இறக்குமதிப் பொருள்களாக உணவு, துணி, கார், இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து சாதனங்கள் முக்கியமானவை.
சுற்றுலாத் தலங்கள்:
* உலகில் மிக உயரமான அருவியான ஏஞ்சல்(Angel Falls) வெனிசுலாவில் சிறப்பான சுற்றுலாத் தலமாகும்.
* அமேசான் காட்டுப் பகுதிகள் இயற்கை ஆர்வலர்களுக்கு முக்கியமான ஆராய்ச்சி சுற்றுலாத் தலமாகும்.
* மவுண்ட் ரோராய்மா (Mount Roraima) வெனிசுலாவில் உயரமான மலைப்பகுதியாகும். வெப்பநிலை உயர்வு குறைவு என மாற்றம் ஏற்பட்டபடியே இருக்கும்.
* ஒரினோகோ டெல்டா (Orinoco Delta) வெனிசுலாவில் அமைந்துள்ள ஒரினோக்கோ ஆற்றுப் பகுதியாகும். இங்கு அரிய வகை குரங்கினங்கள், விலங்குகளைக் காணலாம்.
* மோசிமா தேசிய பூங்கா(Mochima NationalPark)இது ஒரு கடற்கரைப் பூங்காவாகும். பல தீவுகளை இணைக்கும் சங்கிலியாக இப்பூங்கா உள்ளது.
* கானாமா தேசிய பூங்கா காண்போரை கவரக்கூடியது. அருவியோடு கூடிய புதிய வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவாகும்.
பிற தகவல்கள்:
ஹியூகோ சாவேஸ்
* சாவேஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் அமைதி உருவாகி முன்னேற்றப் பாதையில் செல்லச் செய்தார்.
* ஒரு கட்டத்தில் அமெரிக்க அரசுக்கு வெனிசுலா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் எண்ணமிருந்தது. அதன் பின் அந்த நாட்டிலுள்ள எண்ணெய் வளத்தை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாமலிருக்க வெனிசுலா உடன் ஒப்புக்கொண்டது.
* நாட்டின் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரமாக இருக்கிறது. இருப்பினும் அரசு முக்கிய துறையான மருத்துவம், கல்வி ஆகியவற்றில் சிறப்பான கவனம் செலுத்தி வளர்த்து வருகிறது.
* மின்சாரத்தை வெளியிடும் அரிய வகை மீனான ‘ஈல்’ என்னும் ஒருவகை மீன்கள் வெனிசுலா கடல் பகுதியில் காணப்படுகின்றன. இந்த மீன்களின் உடலில் இருந்து ஒரு வினாடிக்கு 400 முதல் 650 வோல்ட் மின்சக்தி வெளிப்படும்.
* வெனிசுலாவில் 2019ஆம் ஆண்டு நிலையில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. மக்கள் போராட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் பொருளாதார நிலை சரிவடைந்துள்ளது.
* பொருளாதார நெருக்கடியில் கொலம்பியா உடனான உறவையும் முறித்துக் கொண்டது வெனிசுலா அரசு.
உணவு முறை:
* சோளம், அரிசி, பீன்ஸ், கோதுமை, உருளை, தக்காளி, புதினா, வெங்காயம் போன்ற தாவர உணவுகள் முக்கியமானவை.
* சிற்றுண்டி வகையில் காசேப், ஆர்ப்பா, ஹாலாகா, பாபெலோன், கிரையோலோ, டெக்கியூனோ முதலியன.
* மக்களிடையே மாடு, கோழி, ஆடு ஆகியவற்றின் இறைச்சிகளை உண்ணும் பழக்கமும் உள்ளது.
விளையாட்டு:
* கால்பந்தாட்டம் முக்கியமான விளையாட்டாக வளர்க்கப்படுகிறது.
* கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் கால் இறுதி வரை முன்னேறி உள்ளது.
* மக்களிடையே தடகளம், பேஸ்பால், சைக்கிளிங் போன்ற விளையாட்டுகள் வரவேற்பைப் பெற்றுள்ளன.