செய்து அசத்துவோம் – ‘டார்ச் லைட் ஹவுஸ்’
(Tourch Light House)
தேவையான பொருள்கள்:
1. ஒரு ‘டார்ச் லைட்’ (கை விளக்கு)
2. சதுர வடிவ தடிமனான செவ்வக வடிவ அட்டை.
3. சிறிது தடிமனான செவ்வக வடிவ அட்டை.
4. துளையிடும் கருவி (Punching Machine).
5. ஒட்டும் பசை நாடா (Cellotape)
6. ஒளி ஊடுருவும் மிக மெல்லிய நெகிழி (Plastic) வண்ணத் தாள்கள் (மஞ்சள், சிகப்பு, நீலம், பச்சை).
7. பசை.
செய்முறை:
1. முதலில் செவ்வக வடிவக் காகிதத்தை எடுத்து அதில் துளையிடும் கருவி மூலம் பல துளைகள் போட்டுக் கொள்ளுங்கள்.
2. பின்பு பல நிறமுள்ள நெகிழி (Plastic) தாள்களை சிறுசிறு துண்டுகளாக வெட்டி அதை பசை கொண்டு துளைகளின் மீது ஒட்டிக் கொள்ளவும்.
3. பின்பு அதைச் சுருட்டி வைத்து ஒட்டும் பசை நாடா (Cellotape) கொண்டு ஒட்டிக் கொள்ளவும்.
4. பிறகு சதுர வடிவ அட்டையில் பசையைத் தடவி அதைச் சுருட்டிய பகுதியின் மேல்புறத்தில் ஒட்டிக் கொள்ளவும்.
5. இப்பொழுது அதை எடுத்து கைவிளக்கின் (Torch Light) மீது செருகவும்.
6. பின்பு, இருட்டான பகுதியிலோ, அல்லது இரவு நேரம் என்றால் மற்ற விளக்குகளை அணைத்துவிட்ட பிறகோ கை விளக்கை இயக்கவும்.
இப்பொழுது கலங்கரை விளக்கு (Light House) போல பல வண்ணங்கள் வெளிப்படும். பார்ப்பதற்கு மிகவும் அழகாகத் தோன்றும்.
பிஞ்சுகளே! செய்து அசத்துவோம் பகுதிக்கு நீங்களும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.