பகுத்தறிவு
கந்தன் ஒருநாள் சாலையிலே
கடந்து செல்லும் வேளையிலே
துன்பம் நேர்ந்ததோர் ஊர்தியினால்
தூக்கி எறியப் பட்டானே!
வழியும் குருதி வெள்ளத்தில்
வீழ்ந்து கிடந்தான் பள்ளத்தில்;
வழியே வந்த வாரிஸ்கான்
விரைந்து மருத்துவ மனைசேர்த்தான்
குருதி அதிகம் போனதனால்
கூடுதல் குருதி தேவையென்றார்.
அருமைச் சிறுவன் அவனுந்தான்
அன்புடன் தந்து உயிர்காத்தான்
மதமும் ஜாதியும் பாராமல்
மனிதம் காப்பது பகுத்தறிவு
இதயத் தோடு இதயங்கள்
இணையும் அன்பே பகுத்தறிவு.
-பொதட்டுர் புவியரசன்