குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. மொழிஞாயிறு ஞா.தேவநேயப் _____ பிறந்த நாள் _ பிப்ரவரி 7. (4)
3. “நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார் ஒருவரைத்தான்!’’ என்ற பேரறிஞர் _____. நினைவு நாள் பிப்ரவரி 3. (3)
5. “_____ பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன். (3)
6. மீன் பிடிக்கத் தேவை _____ (2)
8. முகத்தின் ஒரு பகுதி. (4)
10. கவனம் _- வேறு சொல் -_ திரும்பியுள்ளது. (5)
11. _____ வாசல் திறக்கப்பட்டவுடன் சல்லிக்கட்டுக் காளைகள் சீறிப் பாய்ந்து ஓடும் _ திரும்பியுள்ளது. (2)
12. அறிவின் _____ தந்தை பெரியார். (4)
13. _____ த்தினால் செய்த உதவி’’ _ குறள். (2)
14. அச்சு மற்றும் பட்டாசுத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் ஊர். (4)
மேலிருந்து கீழ்:
1. இந்தியத் துணைக் கண்டத்தில் தார் ஒரு _____ ஆகும். (5)
2. பெரியார் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ____ (6) (திரும்பியுள்ளது.)
3. “_____ வழியது உயர்நிலை” (4)
4. “வரவு எட்டு _____ செலவு பத்து _____” என்றால் வாழ்வில் முன்னேறவே முடியாது. (திரும்பியுள்ளது) (2)
7. “புத்தர் ஞானம் பெற்றார் _ இதன் அடியில் _____” (5)
8. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு, தற்காலத்தில் இப்படி அழைக்கப்படுகிறது _____ (3)
9. கம்பு கொண்டு விளையாடும் வீரவிளையாட்டு _____ (5)
12. “மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் _____ச்சாலை” _ பாவேந்தர் (2)
13. காகம் _____ என கரையும். (2)
– பெரியார்குமார்,
இராசபாளையம்
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை பிப்ரவரி 15ஆம் தேதிக்குள்
பெரியார் பிஞ்சு முகவரிக்கு அனுப்புங்கள். பரிசுகளை வெல்லுங்கள்!