உலக நாடுகள் : போர்ச்சுக்கல்(Portugal)
அமைவிடமும் எல்லையும்:
* அய்ரோப்பா கண்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நாடு.
* வடகிழக்கில் ஸ்பெயினும், மேற்கிலும் தெற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன.
* அய்பீரிய தீபகற்பத்தின் கரைப்பகுதியில் அமைந்துள்ள நாடு.
* தலைநகரம்: லிஸ்பன்
* பரப்பளவு: 92,345 கி.மீ.2 (35,580 சதுர மைல்)
வரலாறு:
* கி.மு.1000இல் செல்டிக் மக்கள் இங்கு குடியேறினர்.
* கி.மு.140 வாக்கில் ரோமானியர்களால் கைப்பற்றப்பட்டு கி.பி.5ஆம் நூற்றாண்டு வரை அவர்களால் ஆளப்பட்டது.
* பின்னர் ஜெர்மானியப் பழங்குடியினர் படையெடுத்தனர்.
* கி.பி.711இல் நடந்த முஸ்லிம் படையெடுப்பினால் பெரும்பகுதி கைப்பற்றப்பட்டது.
* வடக்குப் பகுதி மட்டும் கிறித்துவர்களின் வசம் இருந்தது.
* கி.பி.1179இல் போர்ச்சுக்கல் அரசு உருவாகி, பின்னர் முஸ்லிம் ஆதிக்கத்துக்கு உட்பட்ட இடங்களைக் கைப்பற்றி நாட்டை விரிவடையச் செய்தனர்.
* கி.பி. 1270இல் மூன்றாம் அல்ஃபோன்ஸோ அரசால் நவீன போர்ச்சுக்கல்லின் எல்லைகள் இறுதி செய்யப்பட்டன.
* கி.பி. 1580 முதல் கி.பி. 1640 வரை ஸ்பெயினுடன் இணைக்கப்பட்டிருந்தது.
* 15, 16ஆம் நூற்றாண்டுகளில் பல்வேறு மன்னர்களின் முடியாட்சிக்கு உட்பட்டிருந்தது.
* 1932 முதல் 1968 வரை அன்டோனியோ டி ஒலிவீரா சலஸார் போர்ச்சுக்கல்லின் சர்வாதிகாரியாக இருந்தார்.
* 1974இல் கார்னேஷன்ஸ் புரட்சியால் சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டது.
* 1976இல் புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்-பட்டது.
மொழியும் மக்களும்:
* போர்ச்சுகீசியர்கள் 95.3% மற்றவர்கள் 4.7%
* மக்கள் பேசும் மொழி போர்ச்சுக்கீசிய மொழி. நாட்டின் மொழியாகவும் இதுவே உள்ளது.
* லிஸ்பன் கிளை மொழியே போர்ச்சுக்கீசிய மொழியின் அடிப்படையாகும்.
* மக்கள் போர்ச்சுகீசியர் என அழைக்கப்படுகின்றனர்.
* மக்கள் தொகை 10,848,692.
பொருளாதாரம்:
* நாணயம்: யூரோ
* புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்று மிக வேகமாக முன்னேறி வரும் நாடு. தனியார் பங்களிப்பு பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய பங்காற்றுகிறது.
* துணிகள், காலணிகள், ஆடைகள் துறையில் ஏற்றுமதி அதிகமாகச் செய்யப்படுகிறது.
* விவசாயத் துறையில் பெரும்பான்மை மக்கள் பங்கேற்று வருகின்றனர்.
* ஏற்றுமதியில் வேளாண் விளைபொருளாக தாவர எண்ணெய்கள், கோதுமை, காய்கறிகள், காளான், பால் பொருள்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
* மீன் ஏற்றுமதியில் அய்ரோப்பிய கண்டத்தில் சிறந்து விளங்கும் நாடு.
* செம்பு, டங்ஸ்டன், யுரேனியம், டின், அலுமினியம், நிலக்கரி ஆகிய கனிமங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அரசு முறைகள்:
மார்செலோ ரெபலோ டி சோசா
ஆண்டனியோ காஸ்டா
* தலைவர்: மார்செலோ ரெபலோ டி சோசா
* பிரதமர்: ஆண்டனியோ காஸ்டா
* மக்கள் குடியரசு ஆட்சி முறை
* நாட்டின் தலைவரை அய்ந்து ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
* பாராளுமன்றத்திற்கு நான்கு ஆண்டுக்கு ஒரு முறை 230 நபர்கள் தேர்ந்தெடுக்கப்-படுகின்றனர்.
* பிரதமரே, அரசாங்கத்தை தலைமை ஏற்று நடத்தும் அதிகாரம் படைத்தவர் ஆவார்.
* உச்சநீதிமன்றங்கள் சுதந்திரம் கொண்ட அமைப்பாகச் செயல்படுகின்றன.
* உள்ளாட்சி அமைப்புகளை சிறப்பாகச் செயல்படுத்தும் முறையையும் கொண்டுள்ளது.
புவியியல்:
* கோடைக் காலத்தில் அதிகபட்சமான வெப்பநிலையாக 400C (1040F)
* குறைந்தபட்சமான வெப்பநிலையாக 280C (820F) உள்ளது.
* 330 மற்றும் 430N அட்சக் கோட்டிலும், 320 மற்றும் 60W தீர்க்கக் கோட்டிலும் உள்ளது.
* ஆறுகள்: டூரோ (Douro), டாகஸ் (Tagus), கோஅ (Coa), மன்டிஹோ (Mondego), மிரா (Mira).
உணவு முறை:
* மீன் உணவினை அதிகளவில் மக்கள் எடுத்துக்கொள்கின்றனர்.
* சார்டினெஸ் (Sardines) எனப்படும் கடல் உணவு சுற்றுலா பயணிக்கு புதிய உணவாகும்.
* சாண்ட்விச், பிஃபானஸ் சாண்ட்விச் போர்ச்சுகீசியரின் பாரம்பரிய உணவாக கொள்ளப்படுகிறது.
* சிக்கன் பிரி-_பிரி (Piri-piri) மக்களின் விருப்பமான உணவாகும்.
விளையாட்டுகள்:
* கால்பந்தாட்டம் மக்கள் விரும்பி விளையாடும் விளையாட்டு.
* நாட்டின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ, 10 முறைக்கு மேல் விருது பெற்றுள்ளார்.
* உலக அளவில் சிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் மூன்று முறை தேர்வு பெற்ற பெருமை ரொனால்டோவைச் சாரும்.
* கூடைப்பந்து, நீச்சல், தடகளம், கைப்பந்து, ரக்ஃபி போன்ற விளையாட்டுகள் மக்களால் அதிகமாக விளையாடப்படுகின்றன.
சுற்றுலாத் தலங்கள்:
* உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக லிஸ்பன் நகரம் தேர்வாகி உள்ளது.
* போர்டோ (Porto) போர்ச்சுகலில் இரண்டாவது பெரிய நகரம். இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கான அழகிய வணிக வளாகங்கள் உள்ளன.
* பிரஜா டா மேரின்ஹா (Praja da marinha) இயற்கையில் உருவான அழகிய கடற்கரை. சுற்றுலா பயணிகள் நீராட ஏற்ற இடமாகும்.
* லிஸ்பனில் உள்ள மோஸ்டிரோ டாஸ் (Mosteiro dos) எனும் பழைய கட்டடம் காண்போரைக் கவரக்கூடியது.
* டோமரில் (Tomar) உள்ள மிகவும் பழமையான கட்டடம் வரலாற்று ஆவணமாகப் பாதுகாக்கப்பட்டு, காட்சிப்படுத்தி வருகின்றனர்.