கொரோனா – நோய்…வைரஸ்.. பெயர்.. என்ன.. ஏன்?
சமா.இளவரசன்
அது என்ன COVID-19?
COVID-19 என்பது Corona Virus Disease 2019 என்பதன் சுருக்கமாகும்.
இது எந்த வகை வைரஸ்?
இது SARS-CoV-2 வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, Severe Acute Respiratory Syndrome Coronavirus 2 (தீவிர கடிய மூச்சியக்க கூட்டறிகுறி கொரோனா வைரஸ் 2) என்பதன் சுருக்கம்.
வைரஸ்களுக்குப் பெயரிடுவது யார்? ஏன்?
பிற்காலத்திய ஆராய்ச்சிகளுக்காகவும், வகைப்படுத்தலுக்காகவும், மருந்துகள், தடுப்பு மருந்துகள் தயாரிக்கவும் பெயரிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இப் பெயர்களை பன்னாட்டு மருத்துவர்கள், வைரஸ் ஆராய்ச்சியாளர்கள், பல்துறை அறிவியலாளர்கள் கொண்ட International Committee on Taxonomy of Viruses (ICTV) என்ற அமைப்பு வைக்கிறது. SARSCoV-2 வைரஸ் என்ற பெயரை 2020 பிப்ரவரி 11 அன்று வெளியிட்டது ICTV. இவ்வாறு பெயரிடுவதற்கு முன், புதிய கொரோனா என்று பொருள்படும் Novel Corona என்று அழைக்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.
நோய்களுக்குப் பெயரிடுவது யார்?
உலகளவில் சுகாதாரத்தை மேம்படுத்துவதும், நோய்கள் பரவாமல் தடுப்பதும், அதற்கான மருத்துவம் உலக நாடுகளுக்குப் போய்ச் சேருகிறதா என்பதைக் கண்காணிப்பதும் உலக சுகாதார நிறுவனமான கீபிளி ஏற்றுக் கொண்டிருக்கும் பணி. அதனால் நோய்களுக்குப் பெயரிடுவதும் உலக சுகாதார நிறுவனம் தான். இந் நோய்க்கான பெயரை 2020 பிப்ரவரி 11 அன்று International Classification of Diseases (ICD) இல் வெளியிட்டது உலக சுகாதார நிறுவனம்,
Pandemic, Epidemic….?
Epidemic – கொள்ளை நோய்கள், தொற்று நோய்கள்
Pandemic – உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் பரவும் நோய்களை இவ்வாறு அழைக்கிறோம்.
உலகம் முழுவதும் இத்தகைய கொள்ளை நோய்கள் பல காலங்களிலும் பரவி, பல லட்சக்கணக்கான மக்களை அழித்திருக்கின்றன.
கடந்த நூறு ஆண்டுகளில்….
1918-இல் 5 கோடி மக்களைக் காவு கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ,
1957-இல் 11 லட்சம் மக்களைப் பலி கொண்ட ஏசியன் ஃப்ளூ,
1968-இல் 5 லட்சம் பேரைப் பலி கொண்ட ஹாங்காங் ஃப்ளூ,
2009-இல் 2 லட்சம் பேர் உயிரிழக்கக் காரணமான ஸ்வைன் ஃப்ளூ (பன்றிக் காய்ச்சல்) என பெரும் இழப்புகளைச் சந்தித்திருக்கிறோம்.
அதெல்லாம் சரி, கொரோனா-ன்னா என்ன?
கொரோனா என்ற லத்தீன் சொல்லுக்கு மலர் மகுடம் என்று பொருள். அதற்கும் மூலம் பண்டைய கிரேக்க மொழி, அதிலும் மலர் மாலை, மலர் வளையம் என்றுதான் பொருள். Corona என்ற இந்த சொல்லின் அடிப்படையில் தான் ஆங்கிலத்தில் Crown (கிரீடம் – மகுடம்) என்னும் சொல் உருவானது.
இவ் வைரஸ் 1950 காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டபோது இதன் வடிவத்தை வைத்து இதற்கு ‘கொரோனா’ என்று பெயரிடப்பட்டது. இதுவரை 6 வைரஸ்கள் இவ்வகையில் கண்டுபிடிக்கப்பட்டன. அவை இந்த அளவுக்கு தாக்கம் தரவில்லை. அவற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஏழாவதாக கொரோனா வகையில் ஒன்றாக வரையறுக்கப்-பட்டுள்ள கோவிட்19 நோயை உருவாக்கும் இந்த SARS-CoV-2 வைரசுக்கு இதுவரை மருந்துகளோ, தடுப்பூசிகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. இனி அறிவியல் உலகம் அதனைக் கண்டுபிடித்து அதனை அழிக்கும். அறிவியல் மட்டுமே உலகைக் காக்கும்.
பழங்கள்:
1. ஆரஞ்சு / சாத்துக்குடி
2. அன்னாசி
3. திராட்சை உள்ளிட்ட
பெர்ரி வகைப் பழங்கள்
4. பப்பாளி
5. கிவி
6. கொய்யா
7. தக்காளி
காய்கறிகள்:
1. கேரட் / பீட்ரூட்
2. கீரைகள்
3. முட்டைக்கோஸ்
4. காலிபிளவர்
5. ப்ரோக்கோலி
6. கத்தரிக்காய்
7. குடை மிளகாய்
ஒரு நாளைக்கு 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் வரை அவசியம் அருந்த வேண்டும்.
இளநீர், பச்சைத் தேநீர், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட விட்டமின் சி அடங்கிய பழச்சாறுகள், பால், மோர், ஊறவைக்கப்பட்ட பாதாம் பருப்பு, வால்நட் போன்றவற்றையும் இன்னும் பரிந்துரைக்கப்படும் சத்தான உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம்.