நவீன காலத்தின் உதயம்
பிரிட்டனில்தான் முதன்முதலில் தொழில்புரட்சி ஏற்பட்டது. 19_ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அத்தொழில் புரட்சி ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்க அய்க்கிய நாடுகளில் பரவியது. அந்நாடுகள் எஃகு, ஜவுளி உற்பத்தி, கப்பல் கட்டுதல் முதலிய தொழில்களில் பிரிட்டனுடன் போட்டியிட்டன. அய்ரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உற்பத்திப் பெருக்கத்தின் காரணமாக மலிவான கச்சாப் பொருள்களை வெளிநாடுகளிலிருந்து பெறவும், உற்பத்தி செய்த பொருள்களை வெளிநாடுகளில் விற்கவும் முயற்சியை மேற்கொண்டன.
ஆப்பிரிக்காவிற்கு வழிகாணுதல்
ஆப்பிரிக்க ஆய்வுப் பயணத்திற்குப் பிறகு 1880 – இல் ஆப்பிரிக்காவின் ஒரு சிறிய பகுதி அய்ரோப்பிய நாடுகளால் ஆளப்பட்டது. 20-ஆண்டுகளுக்குப் பிறகு எத்தியோப்பியா, லைபீரியா தவிர்த்து ஆப்பிரிக்கா முழுவதையும் அய்ரோப்பிய நாடுகள் தங்கள் ஆளுகைக்குள் எடுத்துக்கொண்டன. 1884-இல் பெர்லினில் ஒரு மாநாடு நடந்தது. அதில் அய்ரோப்பிய நாடுகள் எங்ஙனம் தங்களிடையே ஆப்பிரிக்காவைக் கூறுபோட்டுக் கொள்ளலாம் என ஆலோசித்-தனர். ஆனால், அம்மாநாட்டில் ஆப்பிரிக்காவின் எந்தப் பிரதிநிதியும் கலந்துகொள்ளவில்லை.
தொழில்நுட்ப அறிவியல் 19-ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சியின் காரணமாக புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
தொலைபேசி, கேமரா, தட்டச்சு, மின் விளக்குகள் மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்பட்டன. எஃகுத் தொழிலின் முன்னேற்றம், பாரிஸில் உள்ள ஈஃபல் கோபுரம் (EIFFEL TOWER), அமெரிக்க அய்க்கிய நாடுகளில் சிகாகோ, நியூயார்க் போன்ற நகரங்களில் வானளாவிய கட்டடங்கள் கட்டப்-பட்டன. தொடர்வண்டியில் மக்கள் எளிதாகப் பயணம் செய்தனர். டிரான்ஸ் சைபீரியன் போன்ற நீண்டதூர ரயில்பாதைகள் போடப்-பட்டன.
மிதிவண்டி மற்றொரு புதிய கண்டு-பிடிப்பாகும். 1890-இல் மோட்டார் கார் கண்டுபிடிக்கப்பட்டது. 1908-இல் என்றிஃபோர்டு, கார்கள் மக்கள் எளிதாக வாங்கும் முறையில் கண்டுபிடித்தார். 1903 -இல் ஆர்வில் (Orville), வில்பர்ட் ரைட் (Wilbert Wright) என்ற இரு அமெரிக்க சகோதரர்கள், அவர்களே உருவாக்கிய விமானத்தில் பறந்து சாதனை படைத்தனர். ஒரு புதிய பயண சாதனம் உலகுக்குக் கிடைத்தது.