குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. “மானுட சமுத்திரம் நானென்று கூவு’’ என்ற _____ பாரதிதாசன் பிறந்த நாள் ஏப். 29.(5)
4. தமிழ்நாட்டின் தலைநகர் _____(3)
6. பகுத்தறிவு பிறந்ததெல்லாம் _____ கேட்டதனாலே(5)
9. அரசுக்கு வருமானம் _____ கள் மூலமாக வருகிறது. (வலமிருந்து இடமாக.)(2)
10. “கூசி நடுங்கிடு தம்பி கெட்ட _____ என்றால் ஒரு காதத்தில் ஓடு’’ என்றார் புரட்சிக்கவிஞர்.(3)
12. சென்னை மாநகராட்சி _____ கட்டடத்தில் செயல்படுகிறது.(4)
13. ரவையில் செய்யும் ஓர் உணவு.(4)
15. பழைய காலத்தில் பாட்டி தன் இடுப்பில் சொருகி வைத்திருப்பார்.(6)
மேலிருந்து கீழ்:
1. ஏப்ரல் 14-இல் பிறந்த டாக்டர் அம்பேத்கர் _____ என்று வட இந்திய மக்களால் அழைக்கப்படுகிறார் (5)
2. ஆடைகள் நெய்யப் பயன்படும் கருவி _____(2)
3. “_____ ஒரு பறவை… விரிக்கும் அதன் சிறகை’’ ஓர் அழகிய தமிழ்த் திரைப்படப் பாடல். (3)
4. “செல்வத்துள் செல்வம் _____ச் செல்வம்’’ _ குறள். (2)
5. “நடந்தாய் வாழி _____’’ (3)
7. “மயிர் நீப்பின் உயிர் வாழா _____’’ (4)
8. அரசி _ ஆங்கிலத்தில் (3)
10. “_____ இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்’’ _ பழமொழி (3)
11. கடலில் முத்து இதனுள் இருக்கும் _____ (3)
14. “மாபெரும் _____ தனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்’’(2)
– பெரியார்குமார், இராசபாளையம்
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
ஏப்ரல் 15ஆம் தேதிக்குள்
பெரியார் பிஞ்சு முகவரிக்கு அனுப்புங்கள்.
periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!