எத்தனை சாக்லேட்கள் ?
பிறந்தநாளைக் கொண்டாட சாக்லேட்கள் வாங்க நினைத்தாள் புவனா. தன் தந்தையிடம் சென்று பணம் கேட்டாள். புவனாவின் தந்தை, 100 ரூபாய் கொடுத்து, இதற்குள் உன் வகுப்பு ஆசிரியர், தோழிகள் அனைவருக்கும் சாக்லேட் வாங்கிக் கொடுத்துவிடு என்றார்.
சிந்தித்தவாறே சென்ற புவனா வகுப்பு ஆசிரியருக்கும், நெருங்கிய தோழிகள் சிலருக்கும் சற்று விலை உயர்ந்த சாக்லேட்களைத் தேர்வு செய்து வாங்கினாள். பின், மீதி இருந்த பணம் முழுவதற்கும் சாக்லேட்களையே வாங்கி வந்தாள்.
வரும் வழியில், தோழி கலையரசியைச் சந்தித்தாள். இருவரும் பேசிக் கொண்டே வந்தனர். அப்போது கலையரசி, புவனா வாங்கிய சாக்லேட்களை எண்ணிப் பார்த்தாள். 100 சாக்லேட்கள் இருந்தன.
மொத்த சாக்லேட்களின் விலையினைக் கேட்டாள் கலையரசி. 100 ரூபாய் என்றாள் புவனா. என்ன 100 ரூபாய்க்கு 100 சாக்லேட்களா? ஒவ்வொன்றின் விலை என்ன என ஆர்வத்துடன் கேட்டாள் கலையரசி. இது 10 ரூபாய், இது 3 ரூபாய், மீதியுள்ளவை 50 பைசா என்றாள் புவனா.
புவனா வாங்கிய 10ரூபாய் சாக்லேட்கள் எத்தனை?
3 ரூபாய் சாக்லேட்கள் எத்தனை?
50 பைசா சாக்லேட்கள் எத்தனை?