கொரோனா தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்குப் பாதிப்பில்லை
மருத்துவர் இரா.கௌதமன்,
பெரியார் மருத்துவக் குழுமம்
புதியதாக பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதால் தாய்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு புரதங்கள்(immunoglobulins), பச்சைக் குழந்தைகளுக்கு-சிறந்த முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவதால் பெரும்பாலும் நோய்கள் தாக்குவதில்லை. “கொரானோ”வின் பாதிப்பு பச்சிளம் குழந்தைகளை அதிகம் பாதிக்காதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். (தாய் தன் இரத்தத்தை “பாலாக கொடுப்பதாக பொதுவாக மக்கள் நம்புகின்றனர்.தவறான எண்ணம் இது பால் சுரப்பிகளிலிருந்துதான் பால் ஊறிவருகிறது.இரத்தம்தான் பாலாக மாறி வருகினற்தெனில் பிறக்கும் குழந்தைகளும் இந்நோயால் பாதிக்கப்-பட்டிருக்கும்)
புதியதாக பிறந்துள்ள பச்சிளம் குழந்தை களுக்கு “கொரானோ”பாதிப்பில்லை.பல மருத்துவ மனைகளில் நோய் பாதித்த தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு இந்நோய் பாதிப்பில்லை என மருத்துவர்கள் அறிக்கை!