ஒரு விளையாட்டு
மீரா, நிலா, நிஷா, அரவிந்த், ஆஷிக், லோகித்சரண் 6 குழந்தைகளும் வட்டமாக உட்கார்ந்திருந்தனர். பெரியவர்கள் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மீரா 1 என்று சொல்ல, நிலா 2 என்றார். நிஷா 3 என்றார். அரவிந்த் 4 என்றார். ஆஷிக் என்ன சொல்லப் போகிறார் என்று பெரியவர்கள் பார்க்க, அவர் பழம் என்றார். 5 என்பதற்குப் பதிலாக பழம் என்று சொன்னதும் எல்லோரும் கைதட்டினார்கள்.
ஆட்டம் தொடர்ந்து. லோகித்சரண் 6 என்றார். மீண்டும் மீரா நம்பர் சொல்லவேண்டும். 7 என்றார். நிலா 8 என்றார். நிஷா 9 என்றார். அரவிந்த் 10 என்று சொல்ல, அவுட்.. அவுட்.. என்று எல்லோரும் சத்தம் போட்டார்கள். 10க்குப் பதிலாக பழம் என்று அரவிந்த் சொல்லியிருக்கவேண்டும். அவர் தவறாகச் சொன்னதால் அவுட்டாகிவிட, மற்ற 5 பேரும் ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள்.
ஆஷிக் 11 என்றதும், லோகித்சரண் 12 என்றார். மீரா 13 என்றார். நிலா 14 என்றார். நிஷா 15 என்பதற்குப் பதில் பழம் என்றார். எல்லோரும் கைதட்டினார்கள்.
அரவிந்த்தை மீண்டும் சேர்த்துக்கொண்டு, தொடர்ந்து நம்பர் சொன்னபடி ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள். 20, 25, 30, 35 என்று வரும்போதெல்லாம் பழம் என்று சொல்லவேண்டும். நம்பரைச் சொல்லிவிட்டால் அவுட். இப்படியே கடைசிவரை யார் தவறுசெய்யாமல் சரியாகச் சொல்கிறார்களோ அவர்கள்தான் இந்த ஆட்டத்தின் சாம்பியன்.
நீங்களும் உங்கள் நண்பர்களோடு வட்டமாக உட்கார்ந்து இந்த ஆட்டத்தை ஆடிப்பார்க்கலாமே! விளையாடியதுபோலவும் இருக்கும். எண்களைச் சொல்லிப்பார்த்த்தும் போலவும் இருக்கும்.
* * * *
பிஞ்சுகளே.. இந்த விளையாட்டு உங்களுக்கு நிச்சயம் பிடித்திருக்கும். விளையாண்டு பாருங்கள். உங்களுக்கும் இதுபோல வேறு விளையாட்டுத் தெரிந்தால் எழுதி அனுப்புங்கள். அதற்குப் பரிசும் காத்திருக்கிறது. அண்மையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கவின் இல்லம் இணையதளத்தினர் (http://www.kavvinmedia.com) இந்த விளையாட்டைத் தந்திருக்கிறார்கள்.