எப்படி? எப்படி?
கேள்வி : நீர் அருந்தாமல் பல்லி எவ்வாறு உயிர் வாழ்கிறது?
-மு. அருள்வளன், சேலம்பதில் : பல்லி நீர்த் தேவையை இரண்டு விதங்களில் பெறுகிறது. 1. பூச்சிகளை உணவுப் பொருளாக விழுங்கும்போது பூச்சிகளில் உள்ள நீரைப் பெறுகிறது. 2. செல்களின் வளர்சிதை மாற்ற நிகழ்ச்சி நடைபெறும்போது உருவாகும் நீரைத் தக்கவைத்துப் பயன்படுத்திக் கொள்கிறது. பல்லியின் கழிவு நீக்க உறுப்பான சிறுநீரகம் அதிக அளவு நீரை இழப்பதில்லை. அதன் சிறுநீர் அமிலத் தன்மை மிக்கதாக இருக்கிறது. பல்லியின் சிறுநீர் நம் உடலில் காயமாவது அதனால்தான்.
– முகில் அக்கா