கதை கேளு கணக்குப் போடு
படகு ஒன்றில் 15 மனிதர்களும் 15 சிம்பொன்சி குரங்குகளும் பயணம் செய்து கொண்டிருந்தனர். திடீரென வீசிய புயல் காற்றில் படகு சேதம் அடைந்தது. படகினைச் செலுத்திக் கொண்டிருந்த தலைவன், படகில் பயணம் செய்தவர்களைப் பார்த்து, உங்களில் பாதிப்பேர் கடலில் குதித்தால்தான் படகினைப் பாதுகாப்பான முறையில் கரைக்குக் கொண்டு செல்ல முடியும். இல்லையென்றால், படகு தண்ணீரில் மூழ்கிவிடும் என்றார்.
சிம்பொன்சிகளைக் கடலில் குதிக்கச் சொன்னபோது அவை மறுத்துவிட்டன. எந்த முடிவுக்கும் வரமுடியாத சூழ்நிலையில் இருந்தனர் மனிதர்கள். அதில் ஒருவர் மட்டும் யோசித்து, நாம் அனைவரும் வட்டமாக நிற்போம். யார் 9 என்ற எண்ணைச் சொல்லும்படி வருகிறார்களோ அவர் கடலில் குதிக்கட்டும். இப்படியே 15 பேர் குதிக்கட்டும் என்றார். மனிதர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். சிம்பொன்சிகளும் தலையசைத்து ஏற்றுக் கொண்டன.
மனிதர்களையும் சிம்பொன்சிகளையும் வட்ட வடிவில் நிறுத்தினார் அந்தப் புத்திசாலி மனிதர். அப்போது, 9 என்ற எண் தொடர்ச்சியாக சிம்பொன்சிகளிடமே வந்தது. மனிதர்கள் காப்பாற்றப்பட்டனர்.
மனிதர்களும் சிம்பொன்சிகளும் எந்த வரிசையில் வட்ட வடிவமாக நிறுத்தி வைக்கப்பட்டனர்?
விடைக்கு இங்கு கிளிக் செய்யவும்..