இரண்டாம் உலகப்போர்
மக்கள் முதல் உலகப் போரைப் போர்களை முடிவுக்குக் கொண்டுவரும் போர் என அழைத்தனர். ஆனால், முதல் உலக யுத்தம் முடிந்து 1928 _ இல் வர்சேர்ஸ் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. இதன்படி யுத்தத்தில் வெற்றிப்பெற்ற நேச நாடுகளுக்கு ஜெர்மனி பெரிய அளவில் யுத்த இழப்பிற்காக ஈடுசெய்ய வேண்டியதாயிற்று. ஜெர்மனியின் வளம் குன்றியது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிற்று. வறுமையும் பெருகிற்று. எனவே தொழிலாளிகளும், குடியானவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் தேசிய சோஷலிஸ்ட் கட்சியிலும் சேர்ந்தனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு தேசிய சோஷலிஸ்ட் கட்சியின் (Nazi) தலைவர் அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler), 1938 – இல் ஜெர்மனியின் சர்வாதிகாரியானார். அவர் 1939, செம்டம்பர் 1-இல் போலந்துமீது படையெடுத்தார். செப்டம்பர் 3 – இல் பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனிமீது படையெடுத்தன. 1940, ஜூன் மாதத்திற்குள்ளாக ஜெர்மனி பெரும்பாலான அய்ரோப்பிய நாடுகளைத் தன் ஆளுகைக்குள் உட்படுத்தியது. இந்த இரண்டாம் உலகப் போர், உலகம் முழுவதும் நடந்தது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் காடுகளிலும், பசுபிக் தீவுக் கூட்டங்களிலும், வட ஆப்ரிக்காவின் பாலைவனத்திலும், கடல் பகுதிகளிலும் போர் நிகழ்ந்தது. அய்ரோப்பிய நாடுகளின் அனைத்து நகரங்களிலும் குண்டுகள் வீசப்பட்டன. கட்டடங்கள் அழிந்தன. மக்கள் கொல்லப்பட்டனர். நேச நாடுகளின் படைகள், ஜூன் 6, 1944 – இல் பிரான்சின் நார்மன் டி துறைமுகத்தில் வந்து இறங்கின. 1945, ஏப்ரலில் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். 1941, டிசம்பரில் போரில் ஈடுபட்ட ஜப்பான், இறுதிவரை போரிட்டது.
1945, ஆகஸ்ட் 6 – இல் ஹிரோஷிமா என்ற ஜப்பானிய நகரத்தின் மீது அமெரிக்கா முதல் அணுகுண்டைப் போட்டது. இதனால் 78 ஆயிரத்து 150 பேர் மறைந்தனர். ஆகஸ்ட் 9-இல் நாகசாகியில் இரண்டாவது அணுகுண்டு போடப்பட்டது. ஜப்பானியர் நிபந்தனையின்றி அடிபணிய முன் வந்தனர். ஆறு வருடங்களாக நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் 1945 , செப்டம்பர் 2_இல் முடிவுற்றது.
போரில் இழப்புகள் இரண்டாம் உலகப் போரில் 72 மில்லியன் மக்கள் மடிந்தனர்.
அய்ரோப்பாவின் பெரும்பாலான இடங்களை நாசம் செய்தது. புதிய போர் ஆயுதங்கள், அணுகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டனர். 1945, அக்டோபர் 24-இல் அய்க்கிய நாடுகள் சபை அமைக்கப்பட்டது.
– மு.நீ.சிவராசன்