மனம் வாழ்த்தும் மணியம்மையார்
நினைவு வானில் மீண்டும் மீண்டும் நின்று சிரிக்கிறார் – மணியம்மா
நின்று சிரிக்கிறார்! …நினைவு
புனைவு நாடாப் புதுமைப் பெண்ணாய்
பூத்துச் சிரிக்கிறார் – மணியம்மா
பூத்துச் சிரிக்கிறார்! …நினைவு மொழியின் உரிமைப் போரின் மணியாய்
விளங்கிச் சிரிக்கிறார் – மணியம்மா
விளங்கிச் சிரிக்கிறார் …நினைவு
விழியைப் போல வழியைக் காட்டி
விளங்கிச் சிரிக்கிறார் – மணியம்மா
விளங்கிச் சிரிக்கிறார் … நினைவு
வென்று வாழும் மறத்தி போல
முழங்கிச் சிரிக்கிறார்! – மணியம்மா
முழங்கிச் சிரிக்கிறார்! …நினைவு
மன்று பெண்டிர் இழிவை வெல்ல
முழங்கிச் சிரிக்கிறார் – மணியம்மா
முழங்கிச் சிரிக்கிறார்! … நினைவு
பெ. குறளன்பன்,
திருச்சி.