3Dயில் இன்னொரு முயற்சி: போராட்டப் பெரியார்
திரைத்துறையில் கிராபிக்ஸ் கலைஞராகப் பணிபுரியும் திருவான்மியூரைச் சேர்ந்த வைத்தீஸ்வர் துரைகபிலன் என்கிற இளைஞர் பெரியார் தாத்தாவின் 142ஆம் பிறந்தநாளை முன்னிட்டு பெரியாரின் ஆலய நுழைவுப் போராட்டத்தைப் பற்றிய அனிமேஷன் காணொளி ஒன்றை அவருடைய ஆதிவாசி என்கிற வலைக்காட்சியில் பதிவேற்றி உள்ளார்.
அதில் கோவிலுக்குள் நுழைய முற்படும் சிறுவனை, “நீ கீழ் ஜாதி உள்ள வரக்கூடாது, நம் இந்து மதத்திலேயே சொல்லி இருக்கே!” என்று பார்ப்பனர் ஒருவர் கீழே தள்ளிவிடுகிறார். அப்போது தந்தை பெரியாரின் கைத்தடி அவரை தாக்கி சிறுவனை மீட்கிறார் என்பதாகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
“தொண்டு செய்து பழுத்த பழம்” என்ற பாரதிதாசன் வரிகளும், “உன் கடவுளை விட, உன் சாஸ்திரத்தை விட, உன் முன்னோர்களை விட, உன் வெங்காயம் வெள்ளக்கமாத்தை விட, உன் அறிவு பெருசு… அதை சிந்தி” என்ற அய்யாவின் குரலில் அந்த காணொளி முடியும். பார்ப்போர் அனைவரையும் கவரும் வண்ணம் உருவாக்கிய தோழருக்கு நம்முடைய பாராட்டுகள்.
காணொளியைக் காண: https://www.youtube.com/watch?v=3HHzdBlHOlc