பள்ளிக்கூடக்குறும்பு
நான் 11_ஆம் வகுப்புப் படிக்கும்போது, எங்கள் பாட்னி மேம் முழு ஆண்டுத் தேர்வு ப்ராக்டிகல் தேர்வுக்காக சில குறிப்புகளைக் கூறினார். இதற்காக மேடம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளை எடுத்துக் கொண்டு வரவும் என்று கூறினார். குறிப்பாக, தக்காளி (பெர்ரி) யை, ஒரு மாணவரும், மாம்பழத்தை (ட்ருப்) ஒரு மாணவரும், எலுமிச்சை (ஹெஸ்பிரியம்) யை இன்னொருவர் என்று வெவ்வேறு பொருள்களைக் கொண்டு வாருங்கள் என்றார். உடனே, ஒரு மாணவன் எழுந்து, மேம் இவன் பலாப்பழம் எடுத்துக் கொண்டு வர்றானாம். என்று கூறினான். அதை கேட்ட நான் கொல்லென்று சிரித்துவிட்டேன்.
– எஸ். தணிகைவேல், DEEE, II year, தூசி பாலிடெக்னிக் கல்லூரி,
தூசி, செய்யாறு, தி.மலை _ 631 702.