விடுகதை
1. கானமயில் விரித்தாடுவாள், மாலையில் சுருங்குவாள், சூரியனின் காதலி என்பர். அவள் யார்?
2. காய்ந்த மரத்தில் கல்லெறிந்தால் காவல்காரர்கள் பாய்ந்து தாக்க வருவார்கள். அவன் யார்?
3. செம்பட்டு உடலழகி தலைகீழாய் குடை பிடிக்கிறாள். அவள் யார்?
4. தலைக்குக் கவசம் உயிருக்குப் பாதுகாப்பு. அது என்ன?
5. பையுடன் பிறந்தவள் பிள்ளையை அதில் சுமக்கிறாள். அவள் யார்?
6. இலையைப் பறித்தான் ஒருவன், கொதிக்க வைத்தான் இன்னொருவன், ஆஹா என்ன ருசி என்றான் அடுத்தவன். அது என்ன?
7. சடக்கென்று வருவான் சத்தமிட்டுப் போவான். அவன் யார்?
8. வேண்டுதலுக்கு முதல் பலி இவன்தான். அவன் யார்?
9. ஓட்டு வீட்டுக்காரருக்கு வேகமாக நடக்க வராது. அவர் யார்?
10. கடல் இருக்கும்; தண்ணீர் இருக்காது. நாடு இருக்கும்; வீடு இருக்காது. அது என்ன?
விடைக்கு இங்கு கிளிக் செய்யவும்..