எனக்குப் பிடித்த பெரியார்
* பெரியார் என்று பரவலாக அறியப்படுபவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஆவார். (செப்டம்பர் 17, 1879 _ டிசம்பர் 24, 1973)
* சமூக சீர்த்திருத்தத்திற்காகவும், ஜாதியை அகற்றுவதற்காகவும் மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.
* இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் புகழ்பெற்றவை. இவர் வசதியான, முற்பட்ட ஜாதியாகக் கருதப்பட்ட ஜாதியில் பிறந்திருந்தும், ஜாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.
* அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த ஜாதிய வேறுபாடுகளைப் பெருமளவில் அகற்றின.
மு.புஷ்பராணி,
பத்தாம் வகுப்பு,
அரசு மேல்நிலைப் பள்ளி, பாலாமடை.