கதைகேளு கணக்குப் போடு
பள்ளிக்குக் கிளம்பிய லாவண்யா, அவசரமாக வீட்டிற்குள் ஓடி வந்தாள். வீட்டிலிருந்த தாத்தாவிடம் சென்று, தாத்தா எங்கள் வகுப்பு ஆசிரியை ஓய்வுபெறப் போகிறார். எனவே, எங்கள் வகுப்பு மாணவிகளின் நினைவாக வகுப்பாசிரி யருக்கு நினைவுப் பொருளினை வாங்கிக் கொடுக்க நினைத்துள்ளோம். 10 ரூபாய் கொடுங்கள் தாத்தா என்றாள்.
இதனைக் கேட்ட தாத்தா, பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்றுவிட்டீர்களா? யார் வசூல் செய்கிறீர்கள் என்றார். தலைமையாசி ரியரிடம் அனுமதிபெற்று, நான்தான் பணம் வசூல் செய்கிறேன் தாத்தா. மாணவர் களிடம் 20 ரூபாயும், மாணவிகளிடம் 10 ரூபாயும் வசூல் செய்யப் போகிறோம். எங்கள் வகுப்பில் மொத்தம் 50 பேர். 780 ரூபாய் வசூலாகும், இதில் ஆசிரியருக்கு நல்ல நினைவுப் பரிசினை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றாள்.
10 ரூபாயை எடுத்து லாவண்யாவிடம் கொடுத்த தாத்தா, உங்கள் வகுப்பில் இத்தனை மாணவர்கள் இத்தனை மாணவிகள்தானே என்றார். எப்படித் தாத்தா இவ்வளவு சரியாகச் சொன்னீர்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் லாவண்யா. நீ சொன்ன விவரத்தை வைத்துத்தான் சொன்னேன் என்றார் தாத்தா.
லாவண்யாவின் வகுப்பிலுள்ள மாணவ மாணவிகளின் எண்ணிக்கை யினை நீங்களும் கண்டுபிடியுங்களேன்….
விடைக்கு இங்கு கிளிக் செய்யவும்