எதிர்கால லட்சியம்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி வெள்ளை மாளிகையில் நாள்தோறும் தன்னைக் காணவரும் பார்வை யாளர்களுடன் சில நேரம் செலவிடுவார். அன்று அவரைக் காண பள்ளி மாணவர்கள் சிலர் காத்திருந்தனர்.
அவர்களைக் கண்ட ஜனாதிபதி, பளிச்சென்ற புன்னகையுடன் காணப்பட்ட ஒரு மாணவனின் கன்னத்தில் தட்டிக் கொடுத்து, உன் எதிர்கால லட்சியம் என்ன? என்றார். உடனே அச்சிறுவன், அய்யா, இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும். இதுதான் என் லட்சியம் என்றான். கென்னடி, தன் விழியினை மேலே உயர்த்தி நல்லது என்று சிறுவனை வாழ்த்தி அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார்.
அமெரிக்க ஜனாதிபதியாவதுதான் தன் லட்சியம் என்று கூறிய அச்சிறுவன் பின்னாளில் புகழ்பெற்ற ஜனாதிபதியாக விளங்கிய பில் கிளிண்டன்!
ஒருவரது எண்ணம் வெறும் கற்பனையாகவோ, ஆசையாகவோ இருந்தால் மட்டும் போதாது. அதனை அடையும்வரை மிக உறுதியாகச் செயல்பட வேண்டும் அப்படி, உறுதியாகச் செயல்பட்டு, ஜனாதிபதி யானவரே கிளிண்டன்.