விடுகதைகள்
- இருவர்க்கு, மேலும் இருவர் துணை. அவர்கள் யார்?
- ஒரு வாய் தண்ணீரைச் சுமந்தபடி உயரத்தில் நிற்கிறான். அவன் யார்?
- வாரி வாரி வழங்குவான் வெளிச்சம், அதை வாங்கத்தான் ஆளில்லை. அவன் யார்?
- மண்ணுக்குள் இருப்பான் குழம்பிலும் மணப்பான். அவன் யார்?
- வருவான் போவான், வருவது தெரியும் பார்க்கத்தான் முடியாது. அவன் யார்?
- ஆயிரம் கண் உண்டு, அசந்து தூங்க இடம் உண்டு. அது என்ன?
- மூன்று கோடுள்ளவன், அழகு வாலுள்ளவன், பழத்துக்கு மட்டும் எதிரி. அவன் யார்?
- கைக்குப் பூசினால் கல்யாண வீடு, உடம்புக்குப் பூசினால் குளிர்ச்சி. அது என்ன?
- தண்ணீருக்குள் வந்தவனைத் தண்ணீரிலேயே கரைத்தார்கள். அவன் யார்?
- புள்ளிகளைச் சுமந்தபடி புல்வெளியில் நடமாடுவான். அவன் யார்?
விடைக்கு இங்கு கிளிக் செய்யவும்
_ _ _ _ _ __ _ __ _ _ _ _ _ _ __ _ __ _ _ _ _ _ _ __ _ __ _ _ _ _ _ _ __ _ __ _ _ _ _ _ _ __ _