குறுக்கெழுத்துப் போட்டி
கேள்விகள்
இடமிருந்து வலம்
1. பிப்ரவரி 3 ____ அண்ணா நினைவு தினம் (5)
3. “ ____ நடுங்கிடு தம்பி -_ கெட்ட
கோயிலென்றால் ஒரு காதத்தில் ஓடு’’ என்றார் பாவேந்தர் பாரதிதாசன் (2)
5. மாங்காயை காயவைத்து வற்றலாக்கி ____ ஊறுகாய் செய்யலாம் (3)
6. புரட்சியாளர் ஹோசிமின் பிறந்த நாடு ____(5)
7. ____ விலிருந்து செய்யப்படும் உணவுகளைத் தவிர்ப்பது நலம்(2)
10. இந்தச் சூதாட்ட விற்பனை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது (4)
12. “விடு ____’’ குழந்தைகளின் அறிவைக் கூர்மைப்படுத்தும் (2)
13. தவறுகளைச் ____ டிக் காட்டினால் திருத்திக் கொள்ள வேண்டும் (2)
14. அம்மாவின் சமையலறையில் தாளிக்கப் பயன்படும் பொருள் _____ (3)
16. “____ K. சம்பந்தம்” நடிகர் கமல் நடித்த திரைப்படம் (4)
17. “பின் ____” அமெரிக்க இராணுவத்தால் -சுட்டுக் கொல்லப்பட்டார் (3)
மேலிருந்து கீழ்:
1. ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த திரைப்படம் (4)
2. புழுக்கத்தைப் போக்க நம் தாத்தாக்கள் பயன்படுத்திய அந்தக்கால கை ____ (கீழிருந்து மேலாக) (3)
3. சென்னையில் ஓடும் ஆறு(3)
4. “____ மூஞ்சியாக இருக்கக் கூடாது (2)
5. “1929இல் முதல் சுயமரியாதை ____ செங்கல்பட்டில் நடந்தது. (3)
8. குழந்தைகளை தூங்கவைக்கப் பாடும் பாடல் ____(4)
9. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை;
____க்கப்படுகிறார்கள் (2)
11. சென்னை மாநகராட்சி ____ மாளிகையில் செயல்படுகிறது (4)
12. இந்த ஆண்டு மார்கழியில் தமிழகம் முழுவதும் ____ கொட்டித் தீர்த்தது (4)
13. சர்க்கரை ____ ஆங்கிலத்தில் (3)
15. “____ பகாவலி.” எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம்(2).
– பெரியார் குமார், இராசபாளையம்
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
பிப்ரவரி 15ஆம் தேதிக்குள்
‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ,
அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!