மன உறுதி:9 வயதில் இவ்வளவு துணிவா..!!?

¨ ஃபாத்திமா அஹ்மத் அல்- முஸ்தபா என்னும் இந்தச் சிறுமி சிரியாவைச் சேர்ந்தவர். போர்க்கள பூமியான அந்த நாட்டில் நடந்த ஒரு வான்வழித் தாக்குதலின் போது, குண்டு அடிபட்டு அந்தச் சிறுமி தன்னுடைய இடது காலை இழந்தார்.
¨ இப்போது அந்தச் சிறுமி தினமும் 3 கிலோ மீட்டர் தன்னுடைய ஒற்றைக்காலாலேயே நடந்து, சிரியவின் இட்லிப் என்ற பகுதியில் அமைந்துள்ள தன் பள்ளிக்குச் செல்கிறார்.
¨ உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த 9 வயதுச் சிறுமி தனது துணிச்சலாலும் தன்னம்பிக்கையாலும் ஓர் எடுத்துக்-காட்டாகத் திகழ்கிறார்.