அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் -ஏப்ரல் 14
பவுத்தம் தழுவியபோது, எடுத்த உறுதிமொழிகளில் சில
கபிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரனிடம் எனக்கு நம்பிக்கையில்லை. அவர்களை தொழுது வழிபட மாட்டேன்.
கராமன், கிருஷ்ணனிடம் எனக்கு நம்பிக்கை இல்லை. அவற்றை நான் வணங்க மாட்டேன்.
ககவுரி, கணபதி மற்றும் இந்து மதத் தெய்வங்களிடமும் பெண் தெய்வங்களிடமும் எனக்கு நம்பிக்கை இல்லை. வழிபட மாட்டேன்.
ககடவுள்களின் அவதாரத்தை நம்பவில்லை. நான் சிரார்த்தம் செய்ய மாட்டேன். பிண்ட தானமும் தர மாட்டேன். பார்ப்பனரை வைத்து எந்தச் சமயச் சடங்குகளும் செய்ய மாட்டேன்.<
இந்தியாவில் வடக்குக்கும்
தெற்குக்கும் இடையே
மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. வடக்கு மிதவாத மனோபாவம் கொண்டது. தெற்கு முற்போக்-கு எண்ணம் கொண்டது. வடக்கு மூடநம்பிக்கையில் மூழ்கிப் போய் இருப்பது. தெற்கு பகுத்தறிவுப் பாசறையாக இருப்பது. தெற்கத்திய கலாச்சாரம் புதுமையானது. வடக்கத்திக் கலாச்சாரம் பழமையானது.
– (தொகுப்பு நூல்: 1, பக்கம் 218)