இறந்துவிட்டால் இந்த நூலை படிக்க முடியாதல்லவா?
அறிவுலக மேதை சாக்ரடீஸ் மரண தண்டனை பெற்று, மறுநாள் தண்டனைக்குரிய நாள். அன்றைய இரவே அவரது கடைசி இரவு. அப்படி ஒரு சூழ்நிலையில், சிறையின் மங்கிய வெளிச்சத்தில் எந்தவிதக் கவலையுமின்றிப் படித்துக் கொண்டிருந்தார்.
அங்கே இருந்த சிறைக் காவலர் சாக்ரடீசின் அருகில் வந்தார். உங்களுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப் போகிறார்கள். இறப்பினைப்பற்றிய கவலையின்றிப் படித்துக் கொண்டிருக்கிறீர்களே என்றார்.
அதற்கு அறிவுலக மேதை, ஆம், நான் இறப்பதற்கு ஒரு நாள்தான் உள்ளது. அதற்குள் படித்தாக வேண்டும் என்று படிக்கிறேன். இறந்துபோனால் மீண்டும் இந்த நூலைப் படிக்க முடியாதல்லவா? என்றாராம்.