எப்படி? எப்படி?
கேள்வி: நாய் உடலில் காயம் ஏற்பட்டால் அதன் எச்சிலைக் கொண்டே சரி செய்து கொள்கிறதே, எப்படி?
– வ. நவீன், காரைக்குடிபதில்: நாய் மட்டுமல்ல, எல்லா விலங்குகளுக்கும் இந்தப் பண்பு உண்டு. உடலில் காயம் ஏற்பட்டால், அது தன் எச்சிலைக் கொண்டே சரி செய்து கொள்ளும். மனிதன் உட்பட உமிழ்நீர்ச் சுரப்பியில் லைசோசைம் உள்ளது. இது பாக்டீரியாக்களை அழிக்கவல்லது. நாய் தன் எச்சிலைக் கொண்டு தடவும்போது காயத்தின் மீது பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் நுழையாதபடி காத்துக் கொள்கிறது. இது நாயின் சுய வைத்தியமாகும். இதனால், காயமும் விரைவில் குணமாகும்.
– முகில் அக்கா