சஹ்ராவி அரபுக் குடியரசு
- மேற்கு சகாரா என்றும் அழைக்கப்படுகிறது
- தலைநகரம் டிஃபாரிதி (Tifariti)
- அரேபிய ஸ்பானிஷ் மொழிகள் பேசப்படுகின்றன,
- குடியரசுத் தலைவராக மொகமது அப்டிலஸிஸ்(Mohamed Abdelaziz) உள்ளார்
- பிரதமராக அப்தெல்காதா தலெப் ஓமர் (Abdelkader Taleb Omar)உள்ளார்
- நாணயம் சஹ்ராவி பெசெடா(Sahravi Peseta)
தொடக்க காலத்தில் ஸ்பானிஷ் சகாரா என்று அழைக்கப்பட்டது. 1960 இல் ஸ்பானிஷ் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. 1973 இல் சஹ்ராவி விடுதலை முன்னணி மற்றும் போலிசாரியோ விடுதலை முன்னணி ஆகியன இந்த நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டுள்ளன. 1975 இல் மொராக்கோ மன்னர் ஹசன் 3,50,000 படைவீரர்களை அனுப்பி இந்நாட்டை மொராக்காவுடன் இணைப்பதற்கு முயற்சி செய்தார். முயற்சி வெற்றி பெற்றது. எனவே, 1976 ஆம் ஆண்டு ஸ்பானியர் வெளியேறினர்.
பின்பு, போலிசாரியோ விடுதலை இயக்கம் அல்ஜீரியாவின் உதவியுடன் மொராக்கோவுடன் போர் தொடுத்து சஹ்ராவி அரபுக் குடியரசைச் சுதந்திர நாடாக்கியது. 1990 இல் அய்க்கிய நாடுகள் சபை தலையிட்டு, மொராக்கோவிற்கும் போலிசாரியோ விடுதலை இயக்கத்திற்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தது.
தொழில்
பாலைவன அமைப்பில் நிலப்பரப்பு அமைந்துள்ளதால் விவசாயம் செய்ய முடிவதில்லை. உலகிலேயே பாஸ்பேட் பாறைகளை அதிகமாகக் கொண்ட நாடாகத் திகழ்கிறது. இதனை வைத்தே வருமானத்தை ஈடுசெய்துவிடுகின்றனர். பால் ஏற்றுமதியில் இந்நாடு மொராக்காவுடன் சேர்ந்து உலக மார்க்கெட்டைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. மீன்பிடித்தல், இரும்புத்தாது, உற்பத்திப் பொருள்கள் தயாரித்தல் ஆகியன முக்கியத் தொழில்களாக உள்ளன.
ஏற்றுமதி, இறக்குமதி
பாஸ்பேட் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உணவுப்பொருகள், எந்திரங்கள், மோட்டார் வாகனங்கள், துணி போன்ற தேவைப்படும் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
– மலர்