கணக்கு : எண்ணோடு விளையாடு!
திருச்சி தமிழன்பன்
அன்பான பெரியார் பிஞ்சுகளே,
இப்போது மூன்று இலக்க எண்களில் ஒரு விளையாட்டு:
1. உங்கள் நண்பரிடம் ஒரு மூன்று (Three Digit) இலக்க எண்ணை எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். (மூன்று இலக்கங்களும் ஒரே எண்ணாகவோ, (Symmetic) சமச்சீர் எண்ணாகவோ இருக்கக் கூடாது. (எ.கா.: 222, 474, 575)
2. அந்த எண்ணைத் திருப்பி எழுதுங்கள்: 476 என்று இருந்தால் 674 என எழுத வேண்டும்.
3. இப்போது அந்த இரண்டு எண்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடியுங்கள். அதாவது பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள்.
(எ.கா.: 674 – 476 = 198)
4. உங்கள் நண்பரிடம் கழித்து வந்த விடையில் மூன்றாவது இலக்கத்தை சொல்லச் சொல்லுங்கள்.
மூன்றாவது இலக்கம் 8 எனில்,
முதல் இலக்கம் – 1 எனில்
நடு இலக்கம் – 9 என்றும் கூறுங்கள்.
5. மூன்றாவது இலக்கம் – 9 எனில்,
இரண்டாவது இலக்கம் – 9 தான்.
முதல் இலக்கம் – 0 எனக் கூறுங்கள்.
6. முதல் இலக்கம் – 3 எனில்,
மூன்றாவது இலக்கம் – 6 எனவும்
நடு இலக்கம்
(இடை இலக்கம்) – 9 எனவும் கூறுங்கள்.
நண்பர்கள் வியப்படைவார்கள்.
எப்படி?
மூன்று இலக்க எண்ணை திருப்பி எழுதி பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழிக்க ஒரு மூன்று இலக்க எண் கிடைக்கும். அந்த எண்ணில் எப்போதும் இரண்டாவது (நடு) இலக்கம் 9 ஆகத்தான் இருக்கம். முதல் இலக்கத்தையும், மூன்றாவது இலக்கத்தையும் கூட்டினால் 9 வரும்.
‘O’ (Zero) சுழியம் ‘ஒன்றுமில்லை’ (Nothing) என்ற எண் உரு இந்தியாவில் கண்டுபிடிக்கப்-பட்டது. வெளிநாட்டு அறிஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. லாபிளாஸ் (La Place) என்ற பிரெஞ்சு கணித அறிஞர் ‘O’ வை கண்டு பிடித்ததற்காக இந்திய கணித அறிஞர்களை பெரிதும் பாராட்டுகின்றார். மேலை நாட்டு கணித மேதைகளால் (பூஜ்யத்தை) சுழியத்தைப் படைக்க முடியவில்லையே என்று வருந்துகிறார்.
சரி, நீங்கள் நன்கு அறிந்த ‘O’ பற்றிய கேள்விக்கான விடையைக் கண்டுபிடியுங்கள்.