மன்னிச்சூ!
‘பெரியார் பிஞ்சு’ _ ஜூன் 2021 இதழை வாசித்த பெரியார் பிஞ்சு இர.அன்புச்செல்வன் அவர்கள் தனக்னிகுத் தென்பட்ட சில பிழைகளைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
1. பக்கம் -4, காலம் 2, பத்தி 2, இறுதி வரியில் ‘படித்திருக்கிறீர்களா?’ என்று இருக்க வேண்டும். அது படித்திருக்கிறார்களா?-’ எனப் பிழையாக அச்சாகி உள்ளது.
2. பக்கம் 5, காலம் 1, பத்தி 2, முதல் வாக்கியத்தில் ‘எல்லோரும், பலரும்’ என்ற இரு சொற்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஏதாவது ஒரு சொல் மட்டும் இடம் பெற்றால் போதும்.
3. பக்கம் 34, காலம் 2, எண் 13இல் ‘அன்பு’ என்பது ‘அம்பு’ என்று இருக்க வேண்டும்.
4. அதே பக்கத்தில் காலம் 1இன் கீழிருக்கும் வண்ணப் பெட்டிக்குள் _ அறிவிப்பில் _ ‘மே 15ஆம் தேதிக்குள்’ _ என்பது, ‘ஜூன் 15ஆம் தேதிக்குள்’ என்று அச்சாகி இருக்க வேண்டும்.
தவறுகளுக்கு வருந்துகிறோம்.
மன்னிச்சூ…
பிழைகளைச் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறோம்.
– பொறுப்பாசிரியர்